தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  White Kurma: தோசை, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ்.. வெள்ளை குருமா செய்யறது எப்டினு பாருங்க

White Kurma: தோசை, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ்.. வெள்ளை குருமா செய்யறது எப்டினு பாருங்க

Manigandan K T HT Tamil
Sep 20, 2023 10:46 AM IST

தோசை, சப்பாத்தி, நான், பூரி போன்ற உணவுகளுக்கு வெள்ளை குருமாவை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

சப்பாத்தி
சப்பாத்தி (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

ருசியான வெள்ளை குருமா செய்வது எப்படி என பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

மசாலா பேஸ்ட் செய்ய

துருவிய தேங்காய் - 1 கப்

முந்திரி பருப்பு - 10

பொட்டு கடலை - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

தண்ணீர்

வெள்ளை குருமா செய்ய

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பீன்ஸ் - 1 கப்

பச்சை பட்டாணி - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

கறிவேப்பிலை

முழு மசாலா

(இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி,

ஜாவித்ரி, பிரியாணி இலை)

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் - 5

உருளைக்கிழங்கு - 1 கப்

கேரட் - 1 கப்

செய்முறை

புதிதாக துருவிய தேங்காய், முந்திரி, பொட்டு கடலை, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து வைக்கவும். அனைத்தையும் நன்றாக பேஸ்டாக அரைத்து தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை சேர்க்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட், நறுக்கிய பீன்ஸ், புதிய பச்சை பட்டாணி சேர்க்கவும். கலந்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கடாயில் தண்ணீர் சேர்த்து, கடாயை ஒரு மூடியால் மூடி, காய்கறிகளை சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, 2 நிமிடங்கள் சமைக்கவும்.

தண்ணீரி கலந்து, கடாயை ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்கள் சமைக்கவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். வெள்ளை வெஜிடபிள் குர்மா சூடாக பரிமாற தயாராக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்