தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Wheat Dosai : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான கோதுமை தோசை – இதுபோல் செய்தால் வித்யாசமாக இருக்கும்!

Wheat Dosai : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான கோதுமை தோசை – இதுபோல் செய்தால் வித்யாசமாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Sep 18, 2023 11:11 AM IST

Wheat Dosai : மொறு மொறுப்பான கோதுமை தோசை செய்வது எப்படி?

Wheat Dosai : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான கோதுமை தோசை – இதுபோல் செய்தால் வித்யாசமாக இருக்கும்!
Wheat Dosai : கிரிஸ்பி அண்ட் டேஸ்டியான கோதுமை தோசை – இதுபோல் செய்தால் வித்யாசமாக இருக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கோதுமை மாவு – ஒரு கப்

(ஒரு அகலமான கிண்ணத்தில் கோதுமை மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, கட்டிகள் இல்லாமல் அதை நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். மாவு ரவா தோசை மாவு பதத்தில் சற்று தளர்வாக இருப்பது நல்லது)

பச்சை மிளகாய் - 2,

மல்லித்தழை – கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 2 (மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அதைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

சீரகம் - 1 ஸ்பூன்,

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஏற்கனவே கட்டியின்றி கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

மாவு கெட்டியானால் மீண்டும் சிறிது நீர் சேர்த்து ரவா தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் 1/2 ஸ்பூன் நெய் தடவி, கரைத்த மாவை கரண்டி உபயோகிக்காமல் ஒரு பெரிய டம்ளர் அல்லது கைப்பிடி உள்ள ஜக்கில் எடுத்து தோசைக் கல்லில் ரவா தோசைக்கு ஊற்றுவது போல மெலிதாக வட்டமாக ஊற்றவும். தோசையை கனமாக ஊற்றக்கூடாது.

தோசை ஒரு புறம் வெந்து கொண்டிருக்கும் போது மேலே 1/4 ஸ்பூன் நெய் விட்டு தோசை திருப்பியால் மென்மையாக தடவி நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் அப்படியே மடித்து எடுக்கவும். க்ரிஸ்பி கோதுமை தோசை தயார்.

தேங்காய் சட்னி இதற்கு படு பக்காவான காம்பினேஷன் ஆகும். எனினும் புதினா, மல்லி, வெங்காயம், தக்காளி சட்னிகளும் நன்றாக இருக்கும்.

பொதுவாக கோதுமை மாவுடன் அரிசி மாவு, ரவை கலந்து இந்த தோசை வார்த்தால் இன்னும் கிரிஸ்பியாக ருசியாக இருக்கும். ஆனால் அது இல்லாமல் கோதுமை மாவிலியே கிரிஸ்பியாக இப்படி செய்தால் கிடைக்கும்.

குறிப்பு - தோசையை குழிக் கரண்டியால் மாவை எடுத்து எடுத்து வார்ப்பதற்குள் மாவு வெந்து விடும். எனவே தான் கப் அல்லது டம்ளர் வைத்து வார்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

WhatsApp channel

டாபிக்ஸ்