தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  No Sugar Diet Effects: எடை குறைப்பு முதல் பற்கள் ஆரோக்கியம் வரை..! 30 நாள்கள் சர்க்கரை சேர்க்காவிட்டால் இத்தனை நன்மைகளா?

No Sugar Diet Effects: எடை குறைப்பு முதல் பற்கள் ஆரோக்கியம் வரை..! 30 நாள்கள் சர்க்கரை சேர்க்காவிட்டால் இத்தனை நன்மைகளா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2023 11:40 AM IST

சர்க்கரை சார்ந்த உணவுகளை பிடிக்காதவர் யார்தான் இருக்கிறார்கள். டயபிடிஸ் பாதிப்பு உள்ளவரும் விரும்பி சாப்பிட கூடியாத இருந்து வரும் சர்க்கரை சாப்பிடுவதை 30 நாள்கள் தவிர்த்தால் உடலில் நிகழும் மாற்றங்கல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

30 நாள்கள் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்தால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக பார்க்கலாம்
30 நாள்கள் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்தால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக பார்க்கலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிக அளவில் சர்க்கரை உட்கொண்டால் பற்கள் பாதிப்படைவுடன், உடல் எடையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

சர்க்கரையை உணவுகள் வழியில் மட்டுமில்லாமல், சில பானங்கள் மூலமும் நாம் எடுத்துகொள்கிறோம். அளவுக்கு அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கூடிய அடிப்படை ஊட்டச்சத்துகள், தாதுக்கள் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சர்க்கரையை 30 நாள்கள் வரை சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்.

எடை குறைப்பு

சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைப்பது அல்லது ஒரு மாதம் வரை சேர்க்காமல் இருந்தால் எடை குறைப்பு ஏற்படும். உடலில் உள்ள வெற்று கலோரிக்களை நீக்கி அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது.

ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது

ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.

ஆற்றல் நிலையை மேம்படுத்துகிறது

ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் செயலிழப்பு ஆகியவற்றை ஏற்பட விடாமல், உடலிலுள்ள ஆற்றல் அளவை நாள் முழுவதும் நிலையாக வைக்க உதவுகிறது.

பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது

சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் வாய்வழி ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் பற்களின் துவாரங்கள் மற்றும் ஈறு நோய் அபாயம் குறைகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்