Weight Loss : உங்க உடல் எடையை சரசரன்னு குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. புற்றுநோய் முதல் இதயம் வரை பல பிரச்சனைக்கு தீர்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : உங்க உடல் எடையை சரசரன்னு குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. புற்றுநோய் முதல் இதயம் வரை பல பிரச்சனைக்கு தீர்வு!

Weight Loss : உங்க உடல் எடையை சரசரன்னு குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. புற்றுநோய் முதல் இதயம் வரை பல பிரச்சனைக்கு தீர்வு!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2024 11:25 AM IST

Weight Loss : இன்றைய இளம் தலைமுறையினர் கேரட்டை விரும்பி உணவில் சேர்த்து கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க கேரட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரட்டை சமைத்து உண்பதை விட எளிதாக ஜூஸ் செய்து குடிக்க பல தரப்பினரும் விரும்புகின்றனர். எளிதாக கேரட் ஜூஸ் தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

Weight Loss : உங்க உடல் எடையை சரசரன்னு குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. புற்றுநோய் முதல் இதயம் வரை பல பிரச்சனைக்கு தீர்வு!
Weight Loss : உங்க உடல் எடையை சரசரன்னு குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. புற்றுநோய் முதல் இதயம் வரை பல பிரச்சனைக்கு தீர்வு! (pixabay)

தேவையான பொருட்கள்

கேரட் - அரை கிலோ

கொத்தமல்லி தண்டு - விருப்பத்திற்கு ஏற்ப

இஞ்சி - சிறிய துண்டு

தேன் - 3 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

கேரட் ஜூஸ் செய்முறை

கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். அதில் கொத்த மல்லி தண்டை சுத்தம் செய்து சேர்த்து கொள்ள வேண்டும். சிறிய துண்டு இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு முதல் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த ஜூஸை நன்றாக வடி கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஸ்பூன் தேனையும் சேர்த்தால் ருசியான கேரட் ஜூஸ் ரெடி. (தேன் சேர்ப்பதற்கு பதிலாக கரும்பு சர்க்கரையையும் சேர்த்து கொள்ளலாம்) இந்த கேரட் ஜூஸ் சுவையானது மட்டும் அல்ல நமது ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

கேரட்டின் நன்மைகள்

கண்களுக்கு நல்லது: இதில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட் நல்ல கண்பார்வை பராமரிக்க உதவுகிறது, பல்வேறு கண் பிரச்சனைகளை குறைக்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது: கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதனால் கேரட்டை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது: கேரட்டின் பல கூறுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குளிர்காலத்தில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது: கேரட் இதயத்திற்கும் நல்லது. ஏனெனில் பல கூறுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் லைகோபீனும் உள்ளது. இதயத்திற்கும் நன்மை பயக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை குறைகிறது.

செரிமானத்திற்கு நல்லது: கேரட் வயிற்றை ஆரோக்கியமாக வைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சரும பொலிவு: தொடர்ச்சியாக கேரட்டை உணவில் சேர்த்து கொள்ளவதால் சரும வறட்சி நீங்கி முகம் மற்றும் உடலை பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கேரட் ஒரு சரியான தேர்வு. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பு படிப்படியாக குறையும். கேரட் ஜூஸ் குடிப்பதோடு முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.