Weight Loss Tips: கலோரி பார்த்து சாப்பிடுங்க..உடல் எடையை குறைக்க கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விருப்ப உணவுகள் இவைதான்
- Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமான கலோரிகள் உட்கொள்வது தான். நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் ஸ்நாக்ஸ்கள் இருக்கும் கலோரி அளவுகளை தெரிந்து கொள்வதன் மூலம் அதை டயட்டில் சேர்ப்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம்
- Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமான கலோரிகள் உட்கொள்வது தான். நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் ஸ்நாக்ஸ்கள் இருக்கும் கலோரி அளவுகளை தெரிந்து கொள்வதன் மூலம் அதை டயட்டில் சேர்ப்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம்
(1 / 6)
ஒவ்வொருவரின் வயது, உடல் அமைப்பு, பாலினம் போன்ற பல்வேறு விஷயங்களை பொறுத்து நாள்தோறும் எவ்வளவு கலோரிகள் சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை உள்ளது. அதன்படி ஒருவர் சராசரியாக 2,500 கலோரி அளவில் உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்கு அதிகமான அளவில் சாப்பிடும் பட்சத்தில் உடல் பருமன், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்
(2 / 6)
நாம் விரும்பி சாப்பிடும் சுவை மிகுந்த சில ஸ்நாக்ஸ் வகைகளில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் உடல் எடை அதிகரிப்புக்கும், உடல் பருமனுக்கும் முக்கிய காரணமாக அமைகின்றன
(3 / 6)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை, மதியம், மாலை என எப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ஆக இருந்து வரும் சமோசாவின் 100 கிராம் அளவில் 250 கலோரிகள் இருக்கின்றன. இரண்டு சமோசாக்கள் சாப்பிட்டாலே காலை உணவுக்கு சாப்பிட்ட பின் தேவைப்படும் கலோரிகளுக்கு அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்
(4 / 6)
சமோசாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேரால் சாப்பிடும் ஸ்நோக்ஸ் ஆக பானி பூரி உள்ளது. வெறும் 6 பானி பூரிகளில்ல 250 கலோரிகள் உள்ளது. அப்போது அதற்கு மேல் நீங்கள் சாப்பிடடால் எவ்வளவு கலோரிகள் அதிகரிக்கும் என்பதை நினைத்து பாருங்கள்
(5 / 6)
பீட்சா பிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவில் 215 கலோரிகள் இருக்கின்றன. அதன்படி இரண்டு துண்டுகள் சாப்பிட்டாலே கிட்டத்தட்ட 500 கலோரிகள் வரை கிடைக்கிறது. பீட்சாவின் அளவுக்கு ஏற்ப கலோரிகளில் மாற்றம் ஏற்படுத்தி பாதிப்பை விளைவிக்கும்
(6 / 6)
பீட்சாவை விட மிக மோசமான, அதிக கலோரிகள் மிக்க உணவாக பட்கர் உள்ளது. வெறும் 200 கிராம் பர்கரில் 400 கலோரிகள் இருக்கின்றன. அதேபோல் 25 கிராம் சிப்ஸில் 150 கலோரிகள் இருக்கின்றன. எனவே இந்த வகை ஸ்நாக்ஸ் உணவுகள் ஒரு போதும் எடை குறைப்புக்கு உதவாது. மாறாக எடை அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் என்பதை கவனித்தில் கொள்க
மற்ற கேலரிக்கள்