அல்சர், மலச்சிக்கல், புற்றுநோயைத் தடுத்து ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அல்சர், மலச்சிக்கல், புற்றுநோயைத் தடுத்து ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ்

அல்சர், மலச்சிக்கல், புற்றுநோயைத் தடுத்து ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ்

I Jayachandran HT Tamil
Mar 11, 2023 05:22 PM IST

அல்சர், மலச்சிக்கல், புற்றுநோயைத் தடுத்து ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ்
ஆரோக்கிய நன்மைகளைத் தரும் முட்டைக்கோஸ்

ஏதோ கடலைப்பருப்பு, பட்ட மிளகாயை கிள்ளிப்போட்டு ஒரு பொரியலை செய்து சமையலை ஒப்பேற்றிவிடுகிறார்கள் என்பது பொதுவாக இல்லத்தரசிகளின் மீது கணவர்களின் அங்கலாய்ப்பாக இருக்கும். ஆனால் முட்டைக்கோஸின் மகத்துவம் தெரிந்தால் இனி இப்படிச் சொல்ல மாட்டார்கள்

முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை, ஊதா போன்ற பல நிறங்களில் விளைகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியன்டுகள், வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். முட்டைக்கோஸில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்னை, மலச்சிக்கல் பிரச்னைகளை சரி செய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் அழிந்துவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.