உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்! கிலோ கணக்கில் காணாமல் போகும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்! கிலோ கணக்கில் காணாமல் போகும்!

உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்! கிலோ கணக்கில் காணாமல் போகும்!

Priyadarshini R HT Tamil
Oct 27, 2024 06:51 AM IST

உங்கள் உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும், கிலோ கணக்கில் காணாமல் போகும். அப்படி என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்! கிலோ கணக்கில் காணாமல் போகும்!
உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்! கிலோ கணக்கில் காணாமல் போகும்!

கீரைகள்

கீரைகளில் கலோரிகள் குறைவு. நீங்கள் உங்கள் உணவில் தினமும் ஒரு கீரையைக் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்துக்களும் அதிகம். உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதையும் தடுக்கும். இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் சரிவிகித உணவின் முக்கிய அங்கமாகக் கீரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

ஓட்ஸ்

ஓட்ஸ் முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்தின் நற்குணங்கள் நிறைந்தது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து உங்களின் பசியைக் கட்டுப்படுத்தும். நீங்கள் ஓட்ஸை தினமும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது.

பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, பாசி பருப்பு உள்ளிட்ட பருப்புகளில் நார்ச்சத்துக்களும், புரதச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. உங்கள் சரிவிகித உணவில் கட்டாயம் பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கிரீக் யோகர்ட்

கிரீக் யோகர்ட்டில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்களின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. தசைகளை கட்டமைக்க உதவுகிறது. இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உங்கள் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. உங்களின் செரிமானத்தை தூண்டி, உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. சியா விதைகள் உங்கள் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை ஸ்மூத்திகள் அல்லது சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. உங்கள் உடல் தண்ணீரை உறிஞ்சும் திறனை விரிவடையச் செய்கிறது.

ஆப்பிள்

கலோரிகள் குறைவானது ஆப்பிள். ஆனால் நார்ச்சத்துக்கள் இதில் அதிகம். ஆப்பிள் ஒரு சிறப்பான நிறைவைத் தரும் ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்களின் சாப்பிடும் ஆவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. இதன் இயற்கை இனிப்புத்தன்மை, உங்களுக்கு இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.

முட்டை

முட்டை, எல்லோராலும் வாங்கி சாப்பிட முடிந்த மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகும். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. மேலும் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உங்கள் காலை உணவாக நீங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. உங்கள் உடலின் வளர்சிதையைத் தூண்ட உதவுகிறது.

கிரீன் டீ

கிரீன் டீயின் கொழுப்பை எரிக்கும், குணங்கள், அதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் சாத்தியமாகிறது. இதில் உள்ள கெஃபைன் உட்பொருளும் இதற்கு உதவுகிறது. நீங்கள் கிரீன் டீ பருகுவதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. உங்களுக்கு கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.