Walking : அதிகமாக நடப்பதால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? காலை நடைபயிற்சி செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!
Walking : ஆரோக்கியமாக இருக்க தினமும் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் காலை நடைபயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகமாக நடப்பதால் முழங்கால்கள் பலவீனமாகிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
Walking: இன்றைய நாட்களில் நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறி உள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்தல், சரிவிகித உணவுகள் இல்லாமை போன்ற பிரச்சனைகளால் இன்று பலரும், நீரிழிவு பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு கல்லீரல் போன்ற பல பிரச்சனைகள் இயல்பானதாக மாறி வருகிறது. இதனால் பலரும் சிறுவயதிலேயே தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் காலை நடைபயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகமாக நடப்பதால் முழங்கால்கள் பலவீனமாகிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
நடைபயிற்சி இப்படித்தான் செய்ய வேண்டும்
மருத்துவர்களின் கூற்றுப்படி, நடைபயிற்சி முழங்கால்கள் மற்றும் மூட்டுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. முதலில் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். அப்போதுதான் வேகத்தை அதிகரிக்க வேண்டும். முழங்கால்களை நடைபயிற்சிக்கு தயார்படுத்த சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது உடல் இயக்கங்களை சீர்படுத்துகிறது. இது நீண்ட நடைப்பயணத்திற்கு உடலையும் கால்களையும் தயார்படுத்துகிறது. எனவே நடைபயிற்சிக்கு முன் உங்கள் உடலை தயார் செய்வதில் கவனம் கொள்ளுங்கள்
நல்ல காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் கால்கள், முழங்கால்கள், மூட்டுகள் மற்றும் பாதங்கள் நீண்ட நேரம் நடக்கும்போது வலிக்காமல் இருக்க வசதியான காலணிகளை அணியுங்கள். நல்ல தரமான காலணிகளை எடுக்க வேண்டும். தரமான ரன்னிங் ஷூ, முழங்கால்கள் மற்றும் பாதங்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பொருத்தம் இல்லாத ஷூவுடன் நீண்ட தூரம் நடக்க முடியாது. அப்படியே நடந்தாலும் பாதங்களில் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது. இதன் விளைவு முழங்கால்களிலும் உள்ளது.
அதிக தூரம் செல்லலாமா
கடந்த காலங்களில் உங்களுக்கு கால், முழங்கால் அல்லது மூட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தால், நீங்கள் 10 கிலோமீட்டருக்கு மேல் காலை நடைப்பயிற்சி செய்யக்கூடாது. முழங்கால்களைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும் செய்ய வேண்டும். மேலும் அத்திப்பழம், பாதாம், சிக்கன் எலும்பு சூப், மட்டன் எலும்பு சூப் சாப்பிட மூட்டுகள் வலுப்பெறும்.
உங்கள் முழங்கால்கள் மற்றும் மூட்டுகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அதிக எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் உடலில் உள்ள கூடுதல் எடை உங்கள் முழங்கால்களை பாதிக்கிறது. ஏனெனில் உங்கள் கால்கள் உங்கள் உடல் எடையை சுமக்கும். உடற்பயிற்சியுடன் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கு முன் மெதுவான வேகத்தில் நடை பயிற்சியை தொடங்கவும். பின்னர் ஒரு நிலையான வேகத்தை பராமரிக்கவும். நடைப்பயிற்சி வேகத்தை வேகமாக இருந்து மெதுவாக மாற்றுவதை விட சீராக வைத்து உடல் எடையை குறைப்பது எளிது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
தொடர்புடையை செய்திகள்