Apple: சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா.. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு முதல் இத்தனை பிரச்சனையா!-apple can diabetics eat apples is eating apples a problem due to weight gain - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Apple: சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா.. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு முதல் இத்தனை பிரச்சனையா!

Apple: சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா.. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு முதல் இத்தனை பிரச்சனையா!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 16, 2024 09:23 AM IST

Side Effects Of Eating Too Much Apples: தினமும் ஆப்பிளை சாப்பிடுவது உங்களை மருத்துவரிடம் இருந்து விலக்கி வைக்கும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இந்த செய்தியை அவசியம் படிக்க வேண்டும். ஆம், ஆப்பிள் நுகர்வு அனைவருக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா.. ஆப்பிள் சாப்பிடுவதால்  உடல் எடை அதிகரிப்பு முதல் இத்தனை பிரச்சனையா!
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா.. ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு முதல் இத்தனை பிரச்சனையா!

ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஆப்பிள் நுகர்வு அனைவருக்கும் பயனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சிலர் ஆப்பிள்களை கவனமாக உட்கொள்ள வேண்டும். ஆப்பிளை அதிகமாக உட்கொள்வது நன்மை பயப்பதற்கு பதிலாக அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் ஆப்பிள்களை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.  

ஆப்பிள்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் - 

அலர்ஜி

சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் சரும அரிப்பு, தடிப்புகள் மற்றும் வீக்கம் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களுக்கு ஆப்பிள் சாப்பிட ஒவ்வாமை இருந்தால், அதை உட்கொள்வதை உடனே தவிர்த்து விடுங்கள்.

உடல் பருமன் 

ஏற்கனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆப்பிளில் உள்ள அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை உங்கள் எடையை மேலும் அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குறைந்த அளவில் ஆப்பிள்களை சாப்பிடுவது உங்கள் உடல் குறைப்பு முயற்சிக்கு பலன் தரும்.

வயிற்றுப்போக்கு

ஏற்கனவே வயிற்று போக்கு பிரச்சசனை உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடக்கூடாது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக ஆப்பிளை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படலாம்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளும் ஆப்பிளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஆப்பிள்களில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்.

செரிமான பிரச்சனைகள் 

ஏற்கனவே செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள்களை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆனால் ஆப்பிளை அதிகமாக உட்கொண்டால், அது வாயு, வயிற்று வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும்.

ஒரு நாளில் எத்தனை ஆப்பிள்களை சாப்பிடலாம்?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. அதேபோல் தான் ஆப்பிளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. சராசரியாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு ஆப்பிள்களை சாப்பிடலாம். இதை விட ஆப்பிள்களை அதிகம் சாப்பிட்டால், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்.  

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.