9 Best Calcium Rich Foods : உடலில் கால்சிய சத்தை அதிகரிக்கணுமா? நீங்கள் சாப்பிடவேண்டியது இந்த 9 வகை உணவுகள் தான்!
9 Best Calcium Rich Foods : உங்கள் உடலில் கால்சிய சத்தை அதிகரிக்க வேண்டுமா? எனில் நீங்கள் இந்த 9 வகை உணவுகளை கட்டாயம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் உடலில் கால்சியச் சத்தை அதிகரிக்கச் செய்யும் 9 சிறந்த உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கால்சியம் சத்து உடலில் பல்வேறு வேலைகளைச் செய்கிறது. கால்சியச்சத்து, உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பற்களை வலுப்படுத்துகிறது. உங்கள் இதயத்துடிப்பை முறைப்படுத்துகிறது.
தசைகளை வலுவாக்குகிறது. ரத்தம் உறைதலை சரியான அளவில் இருக்கச் செய்கிறது. குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ரிக்கட்ஸ் நோய் வருகிறது. பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு புரை நோயாக மாறுகிறது.
19 வயது முதல் 64 வயது வரை உள்ள வளர்ந்த ஒரு நபருக்கு தினமும் 700 மில்லி கிராம் கால்சியச்சத்து தேவைப்படுகிறது. அதேநேரத்தில் நீங்கள் ஒரு நாளின் தேவையைவிட அதிகளவு கால்சியம் எடுத்துக்கொண்டால் அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. சரிவிகித உணவுடன், கால்சியத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்
பால் பொருட்கள்
பால், சீஸ், யோகர்ட், பன்னீர் என பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் கால்சியச் சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கீரைகள்
கீரைகளில் அதிகளவில் கால்சியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு கால்சியத்தை மட்டும் கொடுக்கவில்லை. பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.
பாதாம்
ஒரு கைப்பிடியளவு பாதாமில், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், உங்கள் உடலுக்கு தேவையான அளவு கால்சியச்சத்தும் உள்ளது.
சால்மன்
மீன் வகைகள் குறிப்பாக, முள் உள்ள மீன்களில் அதிகளவில் கால்சியச் சத்துக்கள் உள்ளன.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உங்கள் ஒரு நாளைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு கால்சியமும் உள்ளது.
டோஃபூ
டோஃபூ, இதை நீங்கள் கால்சியம் சல்பேட்டுடன் சேர்த்து தயாரிக்கும்போது, அதில் குறிப்பிட்ட அளவு தாவர அடிப்படை கால்சியச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அத்தி
உலர்ந்த மற்றும் ஃபிரஷ் அத்தி இரண்டிலுமே கால்சியச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் மேலும் நார்ச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.
பருப்பு வகைகள்
காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் பருப்பு வகைகளில், கால்சியம் அதிகம் உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.
எள்ளு
இந்த சிறிய விதையில் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் எண்ணற்ற நன்மைகளுக்காக இந்த விதையை பல்வேறு உணவுகளிலும் தூவி சாப்பிடுகிறார்கள் அல்லது எள்ளை லட்டுகளாக்கி சாப்பிடுகிறார்கள். இது பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்து அருமருந்தாக உள்ளது.
உங்கள் அன்றாட கால்சியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலின் கால்சியச் சத்துக்களை அதிகரிப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்