Vitamin B12 Sources : மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றை சேர்த்துக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு என்னவாகும் தெரியுமா?
Vitamin B12 Sources : மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றை சேர்த்துக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு என்னவாகும் தெரியுமா?
உங்கள் உடலில் வைட்டமின் பி 12ஐ அதிகரிக்கச் செய்யும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் பி ஏன் தேவை என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, டிஎன்ஏ அதிகரிக்க மற்றும் முறையான நரம்பு மண்டல இயக்கம் ஆகியவற்றுக்கு வைட்டமின் பி12 சத்து மிகவும் முக்கியமானது. உடலால் தன்னிச்சையாக வைட்டமின் பி12ஐ உற்பத்தி செய்ய முடியாது. அதை நீங்கள் உணவுகளின் மூலம் மட்டுமே எடுக்கமுடியும். உங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உங்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் உதவுகிறது. எனவே வைட்டமின் பி12ல் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். அதை பின்பற்றி உங்களின ஆரோக்கிய வாழ்வை உறுதிசெய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கட்டாயம் சாப்பிட்டு இயற்கை முறையில் உங்கள் உடலுக்கு வைட்டமின் பி12 கிடைக்க வழிவகை செய்யுங்கள்.
மீன்
ஃபேட்டி ஃபிஷ்ஷில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது. சால்மன், மத்தி மற்றும் கெளுத்தி ஆகிய மீன்களில் வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது. இந்த மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது இதய மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் பி12ஐயும் உடலுக்கு வழங்குகிறது.
முட்டை
முட்டைகள், குறிப்பாக மஞ்சள் கருக்களில் வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்களின் அன்றாட தேவையில் குறிப்பிட்ட அளவு பி12ஐ எடுத்துக்கொள்ள முடியும். அதில் உயர்தர புரதமும் உள்ளது மற்றும் கோலீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது.
பால் பொருட்கள்
குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு பால், சீஸ் மற்றும் யோகர்ட் ஆகியவற்றில் தேவையான அளவு வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளன. எனவே உங்கள் அன்றாட உணவில் தேவையான அளவு பால் பொருட்களை கலந்துகொண்டால் அது உங்கள் உடலுக்குத் தேவையான கால்சியச் சத்துக்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை கிடைக்கச் செய்கின்றன.
இறைச்சி
வைட்டமின் பி12 என்பது சிவப்பு இறைச்சியில் அதிகம் உள்ளது. குறிப்பாக மாட்டு இறைச்சி, செம்மறி ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் அதிகளவில் வைட்டமின் பி12 உள்ளது. அவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. மற்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது. குறிப்பாக ஈரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புக்களை தேர்ந்தெடுத்து சாப்பிடும்போதும் அது உங்களுக்கு தேவையான வைட்டமின் பி12 சத்தைக் கொடுக்கிறது.
சிக்கன்
சிக்கன் மற்றும் வான்கோழியில் இருந்து வரும் இறைச்சியில் போதிய அளவு வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது. இது வைட்டமின் பி 12 சத்துக்கள் அதிகம் சாப்பிட விரும்புபவர்களுக்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது. இதில் அதிக புரதம் உள்ளது.
ஷெல்ஃபிஷ்கள்
சிப்பிகள், சிப்பிகளின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை சாப்பிடலாம். இதில் அதிகளவில் வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் உடலில் வைட்டமிக் பி12ஐ அதிகரிக்கச் செய்ய இது சிறந்தது. ஒவ்வொரு உணவிலும், போதிய அளவு வைட்டமின் சத்துக்கள் உள்ளது.
தாவர அடிப்படையிலான பால்
சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு, ஓட்ஸ், சோயா மற்றும் பாதாம் பாலில் வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் இவற்றை வாங்கும்போது, அந்த லேபிளில் வைட்டமின் பி12 போதிய அளவு உள்ளதா என்று பார்த்து தெரிந்துகொண்டு பின்னர் வாங்குங்கள்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளிலும் வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளன. சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு ஆகும். உங்களின் அன்றாட தேவையான வைட்டமின் பி12ஐ நீங்கள் பருப்பு வகைகளில் இருந்தும் பெறலாம். இதை பாலுடன் சேர்த்து உண்பதாலும் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
தொடர்புடையை செய்திகள்