Turmeric : அதிகமா மஞ்சள் எடுப்பதால் இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கா.. ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் சாப்பிடலாம் பாருங்க!
Turmeric Side Effects : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. மஞ்சளை அதிகமாக உட்கொள்வது நமது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வயிற்றுப் பிரச்சனைகளைத் தவிர, இரத்தம் மெலிதல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை உண்டாக்கும்.

Turmeric Side Effects : மஞ்சள் என்பது பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளது. இது உடலை குணப்படுத்த உதவும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு முதல் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வரை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் இதை உணவுகளில் சேர்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது. மஞ்சள் உண்மையில் பயன்படுத்த பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்தால் ஆம் என்று தான் நாம் சொல்வோம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. அதேபோல் தான் மஞ்சளும் அளவாக எடுத்துககொள்வது நல்லது. கிறிஸ்டின் ஹில், மருத்துவ குழந்தைகள் மற்றும் பெண்கள் சுகாதார மருந்தாளர் கூறுகிறார். மஞ்சளை அதிகமாக உட்கொள்வது நமது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வயிற்றுப் பிரச்சனைகளைத் தவிர, இரத்தம் மெலிதல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை உண்டாக்கும். இது குறித்த விரிவான தகவல்களை அறிந்து கொள்வோம்.
வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள்:
நாம் மஞ்சளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பல பக்க விளைவுகளில் செரிமான பிரச்சனை பிரதானமான ஒன்று. இது செரிமான அமைப்பை சீர்குலைக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாயு, அமில வீச்சு, மஞ்சள் நிற மலம் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
தோல் தடிப்புகள்:
மஞ்சள் பல அழகு சிகிச்சைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பெரும்பாலும் ஹேர் பேக் மற்றும் ஸ்கின் ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும், அதிக அளவு பயன்படுத்துவதால், தோல் மீது சொறி மற்றும் சிரங்கு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மஞ்சளில் உள்ள குர்குமின் மூலப்பொருள் தான் இதற்கு காரணம்.