Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி பாருங்க!

Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி பாருங்க!

Priyadarshini R HT Tamil
Updated Sep 03, 2024 11:52 AM IST

Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி பாருங்க!
Vinayakar Chaturthi : விநாயகர் சதுர்த்திக்கு தாயரா? இதோ பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி பாருங்க!

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

நெய் – 4 ஸ்பூன்

வெள்ளை அல்லது கருப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 2 கப்

பொடித்த வெல்லம் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்

கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 2 கப்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

இளஞ்சூடான நீர்

செய்முறை

எள்ளை ஒரு கடாயில் பொன்னிறமாகும் வரை வறுத்து, பின் தனியாக வைக்கவேண்டும். நீங்கள் கருப்பு எள்ளை எடுத்தால் அதில் கொஞ்சம் வெள்ளை எள்ளை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வெள்ளை எள் பொன்னிறமாவது தெரியும்.

கடாயில், நெய் சேர்த்து, துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவேண்டும். இப்போது வெல்லத்தை சேர்த்து, அது முழுவதுமாக உருகும் வரை வதக்கவேண்டும். தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

வெல்லம் முழுவதுமாக உருகியதும், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவேண்டும். பின்னர் இந்த கலவையில் வறுத்த எள்ளைச் சேர்க்கவேண்டும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, கூடுதல் சுவைக்காக நெய் சேர்க்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து, அதில் உப்பு சேர்க்கவேண்டும். அதை நன்றாக கலந்து, எண்ணெய் சேர்த்துவிட்டு, நன்றாக கலந்தவுடன், சூடான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சிறிது எண்ணெய் சேர்த்து மாவை பிசையவேண்டும். நெய்யும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

மாவின் மீது கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவி வைக்கவேண்டும்.

மோதக அச்சுக்கள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதைப்பயன்படுத்தவேண்டும்.

மோதக அச்சுக்களை பயன்படுத்தும் விதம்

ஒரு அச்சை எடுத்து, ஓரத்தில் அரிசி மாவை வைத்து நடுவில் தேங்காய் பூரணம் வைத்து, இப்போது சிறிது மாவைக் கொண்டு வெளிப்புறப் பகுதியை முழுவதுமாக மூடி, அச்சுகளைத் திறக்கவேண்டும். மோதகம் தயார். அனைத்துயும் இதேபோல் தயார் செய்து, என்னை தடவிய தட்டில் வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, தண்ணீர் கொதித்தவுடன், இட்லி தட்டில் கொழுக்கட்டையை வைத்து மூடி, சிறிது நேரம் வேகவைக்கவேண்டும். விநாயகருக்கு பிடித்த மோதங்கள் தயார்.

அச்சில் வைக்கமால் நமது பாரம்பரிய முறையில் சட்டி செய்து, அதில் பூரணத்தை நிரப்பி கொழுக்கட்டைகளாகவும் செய்துகொள்ளலாம். உங்களுக்கு பிடித்த வகையில் செய்து விநாயகர் சதுர்த்தியை அசத்துங்கள்.