தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vepampoo Rasam : மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேப்பம் பூ ரசம்! இப்படி செஞ்சு பாருங்க!

Vepampoo Rasam : மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேப்பம் பூ ரசம்! இப்படி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2023 10:31 AM IST

Vepampoo Rasam : தமிழ் புத்தாண்டுக்கு தயாரிக்கப்படும் இந்த ரசம் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். இது கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நோய் எதிர்ப்பை வழங்கும். காய்ந்த வேப்பம் பூக்கள் ரசத்தில் மிதக்கும்.

வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி?
வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வேப்ப மரத்தில் ஏப்ரல் மாதங்களில்தான் பூ பூக்கும். அது நிறைய உணவுகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பச்சடி, பொடி, ரசம், சூப் என அதில் இருந்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது. நம் ஊரில் ஆங்காங்கே வேப்பமரங்கள் உள்ளது. சித்திரை மாதத்தில் காய்க்கும் அதன் பூக்களை காய வைத்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

தமிழ் புத்தாண்டுக்கு தயாரிக்கப்படும் இந்த ரசம் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். இது கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால் உடலுக்கு நோய் எதிர்ப்பை வழங்கும். காய்ந்த வேப்பம் பூக்கள் ரசத்தில் மிதக்கும்.

தேவையான பொருட்கள் 

காய்ந்த வேப்பம் பூ – 2 ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு ஊற வைத்து கரைத்து வடித்தது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

வெல்லம் – சிறு துண்டு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

நெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் அல்லது நெய் – 1 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

பருப்பு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

புளியை கரைத்து அதன் தண்ணீரை ஒன்றரை கப் வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு தாளிக்க வேண்டும்.

அவையனைத்தும் பொறிந்ததும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் என ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், வெல்லம் தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

ரசம் நன்றாக நுரை பொங்க கொதித்து வந்தவுடன், அடுப்பை குறைவான தீயில் வைக்க வேண்டும்.

கொத்தமல்லித்தழையைத்தூவி அடுப்பை அணைக்க வேண்டும். இறக்கி வைத்து நன்றாக மூடி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய கடாயில், எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கிக்கொள்ள வேண்டும். அதில் வேப்பம் பூக்களை வறுத்துக்கொள்ள வேண்டும். பூக்கள் பொன்னிறமாக வறுபட்டவுடன், எடுத்து விடவும்.

பூன்னளை வறுக்கும்போது அவை கறுப்பு நிறத்தில் மாறிவிடாமல் பார்த்துக்கெள்ள வேண்டும்.

இதை ரசத்தில் சேர்க்க வேண்டும். வறுத்த வேப்பம் பூக்கள் ரசத்தின் மேல் நன்றாக படர்ந்திருக்கும்.

சாதத்த ரசத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சூப்பாக அப்படியே பருகலாம். 

WhatsApp channel

டாபிக்ஸ்