Groundnut Tomato Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Groundnut Tomato Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள்!

Groundnut Tomato Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 14, 2024 02:29 PM IST

Groundnut Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள். உங்கள் ப்ரேக் ஃபாஸ்ட், லன்ச், டின்னர் மூன்றும் சிறக்கும்.

Groundnut Tomato Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள்!
Groundnut Tomato Thuvayal : வேர்க்கடலையை வறுத்து தக்காளியுடன் சேர்த்து இப்படி ஒரு துவையல் அரைத்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

வேர்க்கடலை – ஒரு கப்

வர மல்லி – ஒன்றரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

தக்காளி – 2

பூண்டு – 6 பல்

பச்சை மிளகாய் – 3

புளி – சிறிதளவு

கல் உப்பு – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலையை பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வேர்க்கடலையை வறுக்கும்போது, அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கடலையை தீய விட்டுவிடக்கூடாது. தீய்ந்துவிட்டால், துவையலின் சுவையே மாறிவிடும். எனவே கடலையை கவனமாக வறுக்கவேண்டும். தொடர்ந்து வறுத்துக்கொண்டிருக்கவேண்டும்.

அடுத்து, கடலை நிறம் மாறியவுடன், சீரகம், வரமல்லி சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அனைத்தையும் வறுத்து, எடுத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவேண்டும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து, தக்காளி வேகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். இந்த கலவையையும் மாற்றி வேறு தட்டுக்கு மாற்றி ஆறவிடவேண்டும்.

இரண்டும் ஆறியவுடன் சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பர் சுவையில் வேர்க்கடலை, தக்காளி துவையல். இதை சாதம், டிஃபன் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.