தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulli Kara Chutney : ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரச்சட்னி, தக்காளி தேவையில்லை; இட்லி-தோசைக்கு செம்ம காம்போ!

Ulli Kara Chutney : ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரச்சட்னி, தக்காளி தேவையில்லை; இட்லி-தோசைக்கு செம்ம காம்போ!

Priyadarshini R HT Tamil
Aug 04, 2023 12:30 PM IST

Andra Special Ulli Kara Chutney : ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரச்சட்டி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். உள்ளி என்றால் வெங்காயம். தக்காளி சேர்க்காமல் வெங்காயம் மட்டுமே சேர்த்து செய்யப்படும் சட்னி உள்ளி காரச்சட்னி.

ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரச்சட்னி
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி காரச்சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயம் – பெரியது அல்லது சிறியது (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் என்றால் 3, சின்ன வெங்காயம் என்றால் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடுகு – 1 ஸ்பூன்

பூண்டு – 10 பல்

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு ஊறவைத்தது

மிளகாய் பொடி – 1 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் பொடி – 1 ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 ஸ்பூன், (நல்லெண்ணெய் சிறந்தது)

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தபின் அதில் கடுகு போட்டு பொரியவிடவேண்டும்.

பின்னர் தோல் சுத்தம் செய்து, நறுக்கிய பூண்டு துண்டுகளை சேர்க்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

ஊறவைத்த புளியை தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.

ஒரு ஸ்பூன் சாதாரண மிளகாய் பொடி, ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாள் பொடி சேர்க்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேரத்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மல்லித்ழை தூவ வேண்டும்.

நன்றாக வதங்கியபின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

ஆறியபின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்ந்து கொரகொரவெண்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெய், கடுகு, உளுந்து தாளிப்பு கொடுக்கலாம் அல்லது வேண்டாம் என்பது முழுக்க முழுக்க உங்கள் தேர்வுதான். 

நல்ல மையாக அரைத்தால் சுவை நன்றாக இருக்காது. எனவே ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ள சுவை அள்ளும்.

இது இட்லி – தோசைக்கு சிறந்த காம்போ. மேலும் சப்பாத்தி, பூரி, அடை, கார பணியாரம், ஆப்பம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.

இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. தக்காளி சேர்க்காமலே இது தக்காளி சட்னி போன்றதொரு சுவை மற்றும் நிறத்துடனே இருக்கும்.

‘எனவே தக்காளி விலை அதிகரிக்கும் காலங்களில் இதுபோன்ற ஒரு சட்னிடைய இட்லி – தோசைக்கு செய்துகொள்ளலாம். தக்காளிச்சட்னி பிரியர்களுக்கு தக்காளியை மிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

இதில் புளியின் அளவை குறைத்துக்கொண்டு, தக்காளி சேர்த்தும் செய்யலாம். குறிப்பாக நிகழ்ச்சிகளில் வாங்கிவந்த தக்காளி அளவு குறைந்துவிட்டால் இதுபோல் செய்து சமாளிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்