தினமும் இருமுறை! உடல் எடை சரசரவென குறையும்! தொப்பை, பருமன் தொல்லை இனி இல்லை! இது மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் இருமுறை! உடல் எடை சரசரவென குறையும்! தொப்பை, பருமன் தொல்லை இனி இல்லை! இது மட்டும் போதும்!

தினமும் இருமுறை! உடல் எடை சரசரவென குறையும்! தொப்பை, பருமன் தொல்லை இனி இல்லை! இது மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Oct 06, 2024 12:41 PM IST

தினமும் இருமுறை இந்த பானத்தை பருகினால் போதும். உடல் எடை சரசரவென குறையும். தொப்பை, பருமன் தொல்லை இருக்காது. இதைச் செய்வதை வழக்கமாக்குங்கள்.

தினமும் இருமுறை! உடல் எடை சரசரவென குறையும்! தொப்பை, பருமன் தொல்லை இனி இல்லை! இது மட்டும் போதும்!
தினமும் இருமுறை! உடல் எடை சரசரவென குறையும்! தொப்பை, பருமன் தொல்லை இனி இல்லை! இது மட்டும் போதும்!

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 1 (அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

இஞ்சி – கால் இன்ச் (துருவியது)

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

தேன் – 2 ஸ்பூன்

புதினா இலைகள் – 10

ஐஸ் கட்டிகளை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவேண்டும். அதில் துருவிய இஞ்சி, அதை 10 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். உங்களுக்கு இஞ்சியின் சுவை அதிகம் வேண்டுமென்றால், இன்னும் நீண்ட நேரம் கொதிக்க விடலாம்.

இந்த தண்ணீரை வடிகட்டி, இதில் எலுமிச்சையை பிழிந்துவிடவேண்டும். அதில் வினிகர் சேர்க்கவேண்டும். இதை நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

உங்களுக்கு இனிப்பு வேண்டுமென்றால், அதில் தேன் கலந்துகொள்ளவேண்டும். தேனை நன்றாக கலந்து, ருசி பார்த்து தேவைப்பட்டால் இன்னும் தேன் கலந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் இதை சூடாக பருகவிரும்பினால் அப்படியே பருகலாம் அல்லது குளுமையாக பருக விரும்பினால், ஃபிரிட்ஜில் வைத்து அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம். அதில் புதினா இலைகளை சேர்த்து ஊறவைத்து பருகவேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கவும், நீர்ச்சத்துக்கும் உதவுகிறது. உங்கள் உடல் எடையை குறைக்க சிறப்பான பானமாகும்.

இஞ்சி

இஞ்சியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது செரிமானத்தைப் போக்குகிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது நீங்கள் அதிகம் உட்கொள்வதை தடுக்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது இந்த பானத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது.

குறிப்புகள்

இந்த பானத்தை நீங்கள் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் அது உங்களின் நாள் முழுமைக்குமான ஆற்றலைத் தரும்.

நீங்கள் உடற்பயிற்சி முடித்தவுடன் இதை பருகினால் உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைத் தரும்.

உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கவேண்டுமெனில் இதை தினமும் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.