வீட்டுத் தோட்டம் அல்லது தொட்டியில் புதினா வளர்ப்பது எப்படி? அறுவடை எப்போது செய்யலாம்? இதோ முழு விவரம்!
வீட்டுத் தோட்டம் அல்லது தொட்டியில் புதினா வளர்ப்பது எப்படி? அறுவடை எப்போது செய்யலாம்? இதோ முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
புதினாவை எப்போது வளர்த்து, அறுவடை செய்து எப்படி சேமிக்க வேண்டும் என்று இங்கு முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக புதினாவை வணிக உபயோகங்களுக்காக வளர்க்கும்போது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விதைக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம். அறுவடை என்றால் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை செய்யலாம். புதினாவில் டீ, சட்னி, சாதம் என எண்ணற்ற ஆற்றல் நிறைந்த உணவுகளை செய்ய முடியும். இதை வளர்ப்பது எளிது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் தோட்டத்தில் வைப்பதால் இது உங்களுக்கு தேவையான பூச்சிகளை தோட்டத்துக்கு அழைக்கும். தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்டவற்றை கவர்ந்திழுக்கும் தன்மைகொண்டது.
புதினா வளர்ப்பது எப்படி?
ஈரமான பொலபொலப்பான மண்ணில்தான் புதினாவை வளர்க்கவேண்டும். இதற்கு சூரிய ஒளி மற்றும் குறிப்பிட்ட அளவு நிழலும் வேண்டும். இதை நீங்கள் தொட்டியில் வளர்க்கவேண்டும். வீட்டுத்தோட்டத்தில் வளர்த்தால் அடர்ந்து வளர்ந்து மற்ற செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். எப்போது வேண்டுமானாலும் பறித்துக்கொள்ளலாம். சில செடிகளை பூக்கள் பூக்க அனுமதியுங்கள். ஆண்டு முழுவதும் வளரக்கூடியது. ஆண்டில் ஒருமுறை உரமிட வேண்டும். இலையுதிர் காலத்தில் நன்றாக வெட்டிவிடவேணடும். அப்போதுதான் வசந்த காலத்தில் ஆரோக்கியமான இலைகள் முளைக்கும்.
புதினாவவை அதிகம் உட்கொண்டால் அது வயிறு கோளாறுகளை ஏற்படுத்தும். புதினாவை நீங்கள் விதையில் இருந்து முளைக்க வைக்க முடியாது. தண்டுகள் மற்றும் வேர்களை வெட்டி வைத்து முளைக்கச் செய்யலாம். இதை நீங்கள் இலையுதில் காலம் அல்லது வசந்த காலத்தில் நடலாம். மண் தரமானதாக இருக்கவேண்டும். வேர்களுக்கு தண்ணீர் தாராளமாகக் கிடைக்கவேண்டும். ஆனால் அதிகப்படியான தண்ணீர் வேர்களை அழுகச்செய்யும்.
தொட்டியில் புதினா வளர்ப்பது எப்படி?
புதினாவை தொட்டியில் வளர்ப்பது நல்லது. அதற்கு உபயோகப்படுத்தப்படும் மண்ணில் ஆண்டுக்கு இருமுறை இயற்கை உரமிடவேண்டும். ஒரு அடிப்பாகம் இல்லாத பக்கெட்டையும் மண் தரையில் வைத்து புதினாவை வளர்க்கலாம். இது வேர்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே படர்ந்து வளர உதவும். தொட்டியில் வைத்து வளர்க்கும்போது நீங்கள் சமையலறையிலே வளர்க்கலாம். ஏனெனில் அவ்வப்போது நீங்கள் ஆய்ந்துவிடுவீர்கள். இதனால் உங்களுக்கு பயிர் அதிகம் கிடைக்கும்.
பாதுகாப்பது எப்படி?
புதினாவை தொடர்ந்து வெட்டி வளர்த்தால்தான் புதிய இலைகள் வரும். கோடைக்காலத்திற்கு பின்னர், பூத்து முடித்தவுடன் இவற்றை நன்றாக வெட்டிவிடவேண்டும். நைட்ரஜன் சத்துக்கள் அதிகம் நிறைந்த உரமிடவேண்டும். இதனால் புதிய இலைகள் வளரத் துவங்கும். இது இலைகளை இலையுதிர் காலத்தில் பறிக்க ஏதுவாக இருக்கும். புதினா போன்ற தாவரங்களில் உள்ள இலைகளை விரைவில் பறித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் புதிய இலைகள் உருவாகிக்கொண்டு இருக்கும்.
சேமிப்பது எப்படி?
அதிக புதினா முளைத்துவிட்டால், அதை ஃப்ரிசரில் வைத்துதான் சேமிக்கவேண்டும். அலசி காயவைத்து, நன்றாக நறுக்கி சேமித்துக்கொள்ளலாம். ஐஸ் க்யூப் ட்ரேவில் வைத்து அப்படியே தண்ணீர் சேர்க்காமல் உறையவைத்துக்கொள்ளலாம். உலர்த்தி பொடியாகவும் தயாரித்து உணவுகளில் சேர்த்து பயன்படுத்தலாம்.
பூச்சி தாக்குதல்
புதினாவை பூச்சிகள் தாக்கும், எனவே செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும். தண்டும் நேராக வளர்கிறதா என்பதை ஆய்வுசெய் வேண்டும். இதில் உள்ள பூச்சிகள் மண்ணில் மூன்று ஆண்டுகள் வரை தங்கும் என்பதால் கவனம் தேவை. வண்டுகளும் புதினாவைத்தாக்கும். இது சிறிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும். அதிக பூச்சிகள் தாக்கினால், அது பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே பூச்சிகள் தாக்கும்போது கவனம் தேவை.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்