Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ்! இனி வீட்டிலே செய்யலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! செய்வதும் எளிது!-homemade kulfi gluglu kulfi ice now you can do it at home kids love it easy to do too - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ்! இனி வீட்டிலே செய்யலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! செய்வதும் எளிது!

Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ்! இனி வீட்டிலே செய்யலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! செய்வதும் எளிது!

Priyadarshini R HT Tamil
Oct 01, 2024 03:44 PM IST

Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ், இனி வீட்டிலே செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதைச் செய்வதும் எளிது. எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ்! இனி வீட்டிலே செய்யலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! செய்வதும் எளிது!
Homemade Kulfi : குளுகுளு குல்ஃபி ஐஸ்! இனி வீட்டிலே செய்யலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! செய்வதும் எளிது!

தேவையான பொருட்கள்

பால் – அரை லிட்டர்

பாதாம் – 15

முந்திரி – 15

பிரட் துண்டுகள் – 4

சர்க்கரை – கால் கப்

ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

பாதாம் மற்றும் முந்திரிகளை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேணடும். அடுப்பில் அடிக்கனமாக பாத்திரத்தை வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவேண்டும். அடுத்த பாலை ஊற்றவேண்டும். 

அதை நல்ல சுண்டக்காய்ச்ச வேண்டும். முதலில் தண்ணீர் சேர்ப்பது பாலை அடிபிடிக்க விடமால் வைத்துக்கொள்ள என்பதால், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் போதும். பால் சுண்ட காயும் வரை கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். 

நன்றாக பாலை கிளறும்போது அதில் ஆடை படறாமல் இருக்கும். தொடரந்து நன்றாக பாலை கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். பாத்திரமும் அடிபிடிக்காது.

முந்திரி மற்றும் பாதாம் இரண்டையும், நன்றாக தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் பிரட் துண்டுகளை சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

பால் நன்றாக கொதித்து சுண்டி வந்தவுடன், அதில் சர்க்கரையை சேர்க்கவேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்.

அடுதுது, அரைத்து வைத்த முந்திரி பாதாம் பேஸ்ட் மற்றும் பிரட் தூள், ஏலக்காய் தூள் என அனைத்தையும் சேர்த்து, சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக சுண்டவிடுங்கள். கையை எடுக்காமல் கலந்துகொண்ட இருக்கவேண்டும்.

பால் நன்றாக சுண்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஆற விடுங்கள். பாலில் ஆடை படர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியமான ஸ்டெப் ஆகும். கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இந்த கலவை இருக்கவேண்டும். அதில் மேலும் முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை பொடித்து தூவவேண்டும். அதை நன்றாக கலந்துவிடவேண்டும்.

பாலை நன்றாக ஆறவைத்து, ஐஸ்கிரீம் மோடில் சேர்க்கவேண்டும். அதன் மேற்புறத்தில் அலுமினியம் ஃபாயில் அல்லது பிளாஸ்டிக் கவர் வைத்து மூட்வேண்டும். குச்சியையும் சொருகிக்கொள்ளவேண்டும்.

உங்கள் ஐஸ்கிரிம் மோல்ட்டில் குச்சி மற்றும் மூடியில்லாவிட்டால் இவையிரண்டையும் செய்யவேண்டும். அந்த மோல்டிலே இருக்கும்பட்சத்தில் இதை செய்யத்தேவையில். இதை 8 மணி நேரம் ஃப்ரிசரில் வைத்து எடுத்தால் சூப்பர் சுவையில் குல்ஃபி தயார். இது வெயில் காலத்தில் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் சாப்பிடலாம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்.டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களைப் பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். தகவல்களைப் பெற்று, ரெசிபிக்களை முயற்சி செய்து பலன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.