Benefits of Wheat : தினம் ஒரு தானியம்! மனஅழுத்தம் முதல் இதய நோய்கள் வரை தடுக்கும் கோதுமையின் நற்குணங்கள் இத்தனையா?
Benefits of Wheat : தினம் ஒரு தானியம்! மனஅழுத்தம் முதல் இதய நோய்கள் வரை தடுக்கும் கோதுமையின் நற்குணங்கள் இத்தனையா?

கோதுமையின் நன்மைகள்
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது
கோதுமை, உங்கள் உடலில் நேர்மறையான பாதிப்புக்களை மட்டும்தான் ஏற்படுகிறது. இதில் செலினியம் உள்ளது. அது உடலுக்கு கேடு விளைவிக்கும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட். தலைமுடி வறண்டுபோகாமல் தடுக்கிறது.
பொடுகு தொல்லையில் இருந்து காக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து மற்றும் வைட்டமின் இ தலைமுடியை ஆரோக்கியமாக்குகிறது. தலைமுடியை சேதமடைவதில் இருந்து காக்கிறது. வயோதிகத்தை தாமதமாக்குகிறது. சருமத்தை தளராமல் இருக்க வைக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
கோதுமையில் உள்ள நார்ச்சத்து, பல நன்மைகளை உங்கள் உடலுக்கு அளிக்கிறது. அதனால் இது செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை, செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இது சருமம் மற்றும் தலைமுடியை காக்கிறது.