Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அச்சச்சோ அத உடனே நிறுத்துங்க! ஏன் என்று உணர வேண்டும்!-top 8 parenting tips parents who fight in front of children oops stop that right now feel why - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அச்சச்சோ அத உடனே நிறுத்துங்க! ஏன் என்று உணர வேண்டும்!

Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அச்சச்சோ அத உடனே நிறுத்துங்க! ஏன் என்று உணர வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Sep 29, 2024 09:55 AM IST

Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அதை தவிர்க்க வேண்டியதன் அவசியம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அச்சச்சோ அத உடனே நிறுத்துங்க! ஏன் என்று உணர வேண்டும்!
Top 8 Parenting Tips : குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா? அச்சச்சோ அத உடனே நிறுத்துங்க! ஏன் என்று உணர வேண்டும்!

உணர்வு ரீதியான பாதுகாப்பு

குழந்தைகள், பிரச்னைகள் மற்றும் டென்சன் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் சென்சிட்டிவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் வாக்குவாதங்களை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அவர்கள் பெற்றோரின் சண்டைகளை பார்க்கும்போது, அவர்களுக்கு பயம், பதற்றம், சோர்வு, துன்பம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவை ஏற்படும்.

மனக்கசப்பு உணர்வு

குழந்தைகளுக்கு ஒரு பெற்றோர் சண்டையிடுவதையோ அல்லது பிரச்னைகளில் இருப்பதையோ பார்த்தால் மனக்கவலையை ஏற்படுத்தும். இதுபோன்ற தொடர் வாக்குவாதங்கள் அல்லது உரையாடல்கள் அவர்களுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். அவர்கள் சிக்கல்களுக்கு மத்தியில சிக்கிக்கொண்டதைப் போல் உணர்வார்கள். இதனால் அவர்களுக்கு உணர்வுரீதியான தடுமாற்றம், குடும்பத்தில் உடைந்த உறவுகளுக்கு வழிவகுக்கும்.

நாள்பட்ட உளவியல் பாதிப்புகள்

பெற்றோர் தொடர்ந்து சண்டையிடும் நபர்களாக இருந்தால், அதை குழந்தைகள் பார்த்துக்கொண்டேயிருந்தால், அவர்களுக்கு நீண்ட கால மன ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும். இதனால் அவர்கள் பயம், மனஅழுத்தம் மற்றும் நடத்தை பிரச்னைகள் ஆகியவற்றில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் ஒரு அசாதாரணமான சூழலில் வளர்வதால் அவர்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், உணர்வு கொந்தளிப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான வளர்ச்சியை பாதிக்கிறது.

எதிர்மறை நடத்தைகளுக்கு மாதிரியாவது

ஒரு குழந்தைகள் பெற்றோரின் விவாதத்தை தொடர்ந்து கவனித்து வந்தால், அந்தக்குழந்தை, அவர்களை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பராமரிக்கும் உறவுகளிலும் இந்த முறையையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். கத்துவது அல்லது சண்டையிடுவதுதான் பிரச்னைகளை தீர்க்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வழி என்று எண்ணிக்கொள்கிறார்கள். இது அவர்களின் சமூக வளர்ச்சியை பாதிக்கிறது.

பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும்

பெற்றோரிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், குழந்தைகளை அவர்கள் குடும்பத்தின் நிலைத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடும்பம் நிலைக்குமா என அவர்கள் அஞ்சுகிறார்கள். பெற்றோர்கள் பிரிந்துவிட்டால் நமது நிலை என்னவென்று பயப்படுகிறார்கள். இந்த பாதுகாப்பின்மை உணர்வு, வாழ்வில் நிலையின்மைக்கு வித்திடுகிறது. இதனால் குழந்தைகள் தங்களின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

தன்னம்பிக்கை பாதிப்பு

பெற்றோர்களின் வாக்குவாதங்களுக்கு தங்களை குழந்தைகள் காரணமாக எண்ணிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணுகிறார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்படும். இது அவர்களுக்கு உணர்வு ரீதியான ஆறத்தழும்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் அவர்கள் உள்ளுக்குள்ளே பிரச்னைகளில் குமுறுவார்கள்.

சண்டையை தீர்க்கும் திறன் அற்றுப்போவார்கள்.

குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் தங்கள் பெற்றோரின் வாக்குவாதங்களை மட்டுமே பார்த்து வளரும்போது, அவர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்க்கும் திறனை அவர்களால் வளர்த்தெடுக்க முடியவில்லை. அவர்கள் பிரச்னைகளை சந்திக்கும்போது திண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்கால உறவுகளை இது பாதிக்கிறது. இவையனைத்தும் தரும் மனஅழுத்தமும் அவர்களை பாதிக்கிறது. அவர்களால் எதுவும் சரியாகச் செய்ய முடியாமல் போகிறது.

அவர்களின் தேவையில் இருந்து கவகத்தை மாற்றுகிறார்கள்

வாக்குவாதங்கள், குழந்தைகளின் தேவைகள் மற்றும் அக்கறைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது. அவர்கள் கண்டுகொள்ளப்படாதது போல் உணர்கிறார்கள். இதனால் அவர்களுக்கு புறக்கணிப்பு எண்ணம் ஏற்படுகிறது. நாள்பட இது அவர்களின் உணர்வு நலன்களை பாதிக்கிறது. அவர்கள் பெற்றோருடன் அவர்களுக்கு உள்ள தொடர்பையும் குறைக்கிறது. மொத்தத்தில் குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரென்றால், கவனமாக இருங்கள். அவர்களின் எதிர்காலத்தையே அது பாதிக்கிறது என்பதை புரிந்துகொண்டு, அவர்களின் வளமான வாழ்க்கைக்கு வித்திடுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.