Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய்! வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள்! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!-amla jelly candy amla jelly candy kids will love that wow health will also increase - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய்! வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள்! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய்! வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள்! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Sep 28, 2024 05:09 PM IST

Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய், வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள். ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய்! வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள்! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!
Amla Jelly Candy : நெல்லிக்காய் ஜெல்லி மிட்டாய்! வாவ் என்று குழந்தைகள் விரும்புவார்கள்! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.

இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இத்தனை நற்குணங்கள் நிறைந்த நெல்லிக்காயில் ஜெல்லி மிட்டாய் செய்து சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – அரை கிலோ

வெல்லம் – அரை கிலோ

உப்பு – சிறிதளவு

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயை சுத்தம் செய்து அலசி, ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். வெந்த நெல்லிக்காயை எடுத்து ஆறவைத்து தண்ணீர்விடாமல் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்த்து வெல்லம் கரைந்தவுடன் வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் கரைத்த வெல்லம் மற்றும் அரைத்த நெல்லிக்காய் விழுது இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். மூடிவைத்துவிடவேண்டும். 

இல்லாவிட்டால் வெளியே சிதறிவிடும். அவ்வபேபோது திறந்து பார்த்து கிளறிவிட்டால் இரண்டும் கெட்டியாகி வரும். அதில் சிறிது உப்பு மற்றும் நெய்யை ஊற்றி கிளறிவிடவேண்டும்.

ஒரு தட்டில் நெய் தடவி, கெட்டியான நெல்லிக்காய் வெல்ல கலவையை பரப்பிவைக்கவேண்டும். அதை அப்படியே அரைமணி நேரம் விட்டால் அது கெட்டியாகி ஜெல்லி மிட்டாய்போல் மாறிவிடும். அதை எடுத்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெட்டி வைத்துக்கொண்டு, தினமும் ஒன்று சாப்பிடவேண்டும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது. இவையிரண்டையும் எடுத்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு நோயே ஏற்படாது. நெல்லிக்காயே வேண்டாம் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஏனெனில் இது இனிப்பாகவும் இருக்கும், ஜெல்லி மிட்டாய் போலும் இருக்கும். கடையில் ஜெல்லி மிட்டாய்களை வாங்கிக் கொடுக்காமல் குழந்தைகளுக்கு மட்டும் இதுபோல் வீடுகளிலே செய்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அவர்களின் மிட்டாய் கிரேவிங்குகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.