Top 7 Benefits of Carrot Juice : தினமும் காலையில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்! உடலில் என்னவெல்லாம் மாயம் செய்யும் தெரியுமா?
Top 7 Benefits of Carrot Juice : தினமும் காலையில் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்! உடலில் என்னவெல்லாம் மாயம் செய்யும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் கேரட் ஜூஸ் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்வீர்கள். உணவில் நாம் அன்றாடம் கேரட்டை ஏன் சேர்க்கவேண்டும்? கேரட் ஜூஸ் உங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தரும் ஒரு ஜூஸ் ஆகும். இதில் எண்ணற்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் காலையை சிறப்பானதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும். தினமும் காலையில் கேரட் ஜூஸ் பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட கேரட் ஜூஸ் கட்டாயம் பருகி பலன்பெறுங்கள்.
வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கும்
கேரட் ஜூஸில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இது உங்கள் உடல் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உங்களை ஆரோக்கியத்துடனும், உங்களுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை நீங்கள் பருகுவது உங்கள் உடல் நாள் முழுவதும் நோய்களை எதிர்த்து போராட இயற்கை ஆற்றலைத்தரும். எனவே காலையில் தினமும் கேரட் ஜூஸ் பருகுவதை கட்டாயமாக்குங்கள்.
செரிமானம் மற்றும் கழிவு நீக்கம்
கேரட் ஜூஸில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயிறு உப்புசத்தைத் தடுக்கும். உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். உங்களின் நாளை கேரட் ஜூஸ் சாப்பிட்டு துவங்கினால், அது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உங்கள் உடலை சீராக வைக்கும். உங்களுக்கு புத்துணர்வைத் தரும்.
கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறன்
கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின்கள் நிறைந்துள்ளது. உடல் இதை வைட்டமின் ஏவாக மாற்றுகிறது. இது உங்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கண் தொடர்பான பிரச்னைகளை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே காலையில் தினமும் கேரட் ஜூஸ் பருகுவதால் உங்களின் கண் பார்வைத்திறன் ஷார்ப்பாகிறது. குறிப்பாக வயோதிக காலத்தில் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் தடுக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியம் மற்றும் இயற்கை பொலிவு
கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு மிருதுவான மற்றும் இளமையான தோற்றமளிக்கும் சருமத்தைத் தருகிறது. இது சரும சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது முகப்பருக்களை நீக்குகிறது. காலையில் இந்தச்சாறை பருகுவது உங்கள் உடலுக்கு இயற்கை பொலிவைத் தருகிறது.
எடையிழப்பு
கேரட்டில் கலோரிகள் குறைவு. ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதனால் நீங்கள் காலையில் கேரட் சாறு பருகுவது உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இது உங்கள்களின் ஆரோக்கியமற்ற நொருக்குத்தீனி பழக்கத்தைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தின் சிறந்த நண்பன். இது உங்கள் நாளை ஆரோக்கியமாக துவக்க உதவும்.
மூளை இயக்கம் மற்றும் மனத்தெளிவு
கேரட் ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், உங்கள் மூளையில் இயக்கம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. இது உங்கள் மனத் தெளிவை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்களை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கச் செய்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
கேரட் ஜூஸ் லோ கிளைசமிக் இண்டக்ஸ் உணவுகளில் ஒன்று. இது ரத்த சர்க்கரை அளலை கட்டுக்குள் வைக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்கிறது. உங்களுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு நீரிழவு நோய் இருந்தால், இது உங்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்