Rajinikanth: அடிவயிற்றில் வீக்கம்.. அதிகாலை நடந்த சிகிச்சை.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?- முழு விபரம்-rajinikanth admitted to chennai hospital after severe stomach pain how is rajinikanth health now - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: அடிவயிற்றில் வீக்கம்.. அதிகாலை நடந்த சிகிச்சை.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?- முழு விபரம்

Rajinikanth: அடிவயிற்றில் வீக்கம்.. அதிகாலை நடந்த சிகிச்சை.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?- முழு விபரம்

Kalyani Pandiyan S HT Tamil
Oct 01, 2024 07:33 AM IST

Rajinikanth: ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. - ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்?

Rajinikanth: அடிவயிற்றில் வீக்கம்.. அதிகாலை நடந்த சிகிச்சை.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?- முழு விபரம்
Rajinikanth: அடிவயிற்றில் வீக்கம்.. அதிகாலை நடந்த சிகிச்சை.. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?- முழு விபரம்

அதில், " ரஜினிகாந்த் சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லதா ரஜினிகாந்த் என்ன சொல்கிறார்

அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்பது, ஏற்கனவே மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி, திட்டமிடப்பட்ட நிகழ்வு.

 

ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்!

அதன் படி, நேற்று மாலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்கு உள்ளாக, அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இன்று காலை 6.30 மணியளவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிகிச்சையை மருத்துவர் சாய் சதீஷ் என்பவர்தான் மேற்கொண்டார். அவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர்.

Elective procedure

ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான சிகிச்சை தான். இது அறுவை சிகிச்சை அல்ல. இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். தற்போது ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் கடந்த 28ஆம் தேதி சென்னைக்கு வந்தார்.

திடீர் சிக்கலினால் சிகிச்சையா?

இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே இது திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய சிகிச்சை முறை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வாரங்களாகவே இது தொடர்பாக ரஜினிகாந்த் மருத்துவர் உடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார்.

 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அந்த ஆலோசனையின் வழியாக அந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு உடல் ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி, அவருக்கு அடி வைத்து பகுதியில் வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த நிலையில், வீக்கம் அதிகமானதையடுத்து, ரஜினிகாந்த் இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.