Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும்! தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்க!-tirupathi laddu you can make tirupathi laddu at home check out how to make it delicious and classy - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும்! தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்க!

Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும்! தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 21, 2024 10:06 AM IST

Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும். தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்கள். இனி லட்டுக்காக திருப்பதி செல்லத் தேவையில்லை.

Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும்! தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்க!
Tirupathi Laddu : திருப்பதி லட்டுவை நீங்கள் வீட்டிலேயே செய்யமுடியும்! தரமாக, சுவையாக செய்வது எப்படி என்று பாருங்க!

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 100 கிராம்

சர்க்கரை – 100 கிராம்

காய்ச்சி ஆற வைத்த கெட்டி பால் – 200 மில்லி லிட்டர்

இது வழக்கமான பூந்தி லட்டு சுவையைக் கொடுக்காது. வித்யாசமான சுவையைத்தரும்.

கடலை மாவு – 400 கிராம்

சர்க்கரை பாகு தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் முறை

சர்க்கரை – ஒன்னேகால் கிலோ

தண்ணீர் – தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, இரண்டையும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, பாகுபதம் வந்தவுடன் இறக்கவேண்டும். பாகு ஒரு கம்பி பதம் வரவேண்டும். பாகு காய்ச்சும் போது மிகவும் கவனம் தேவை. பதம் தப்பிவிட்டால் மொத்தமும் காலியாகிவிடும். எனவே கவனமுடன் பாதை தயாரித்துக்கொள்ளவேண்டும். பாகை நுரை பொங்கி வரும்போது, அதை விரல்களில் எடுத்து கம்பி பதம் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

நெய் – தேவையான அளவு

அல்லது

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

(நெய் வைத்துதான் திருப்பதியில் செய்யப்படும் என்பதால், நெய் சேர்க்கும்போது அதன் சுவை திருப்பதி லட்டு போலவே இருக்கும். ஆனால் உங்களுக்கு அதிகம் கொழுப்பு சேர்க்கவேண்டாம் என்றால், எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்)

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, அரிசி மாவு, பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். பின்னர் அதில் சலித்த கடலை மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் தண்ணீராக இருக்குமளவுக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.

தேவைப்பட்டால் கூடுதலாகப் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கரைக்கவேண்டும். பால் சேர்க்கும்போதுதான் திருப்பதி லட்டின் சுவை அப்படியே வரும். இந்த மாவைக்கரைத்து அரை மணி நேரம் புளிக்க விடவேண்டும். பாகை தயாரித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் தாராளமாக சேர்த்து, அது நன்றாக சூடானவுடன் பூந்தி தட்டு அல்லது அரிகரண்டியில் மாவை விடவேண்டும். அது சிறுசிறு பூந்திகளாக எண்ணெயில் பட்டு பொரிய துவங்கும். இதை நல்ல பொன்னிறத்தில் மொறு மொறு பதத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். சாதாரண பூந்தி லட்டுக்கு வறுக்கும்போது மிருதுவாக வறுக்கவேண்டும். ஆனால் இந்த திருப்பதி லட்டுக்கு பூந்தி மொறுமொறுப்புடன் இருக்கவேண்டும்.

சர்க்கரையும், அரிசி மாவும் சேர்ந்துள்ளதால், விரைவில் பொன்னிறமாக வறுபட்டுவிடும். மாவை சரியான பதத்தில் கரைத்தால் மட்டும்தான் பூந்திகள் முத்து முத்தாக வரும். இல்லாவிட்டால் தட்டையாகிவிடும் அல்லது கரைந்துவிடும்.

பொன்னிறமான கிறிஸ்பியான பூந்திகளை ஏற்கனவே சர்க்கரை பாகில் சேர்த்துக்கொள்ளண்டும். சர்க்கரை பாகு கெட்டியாகிவிட்டால் இதை சிறிது சூடாக்கி இளக்கி சேர்க்கவேண்டும். அனைத்து மாவையும் பொரித்து சர்க்கரை பாகில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பூந்திகளை நன்றாக ஊறவைக்கவேண்டும். இதை கொஞ்சம் மட்டும் ஆறவைக்கவேண்டும். வெதுவெதுப்பான சூட்டிலே லட்டு பிடித்துவிடவேண்டும். மிகவும் ஆறிவிட்டால் லட்டுகள் பிடிக்க வராது. எனவே வெதுவெதுப்பான பதத்திலே லட்டுக்களை பிடித்துக்கொள்ளவேண்டும்.

பாதியளவு பூந்தி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதையும் முழு பூந்திகளுடன் சேர்த்தால்தான் லட்டுகள் பிடிக்க வரும். அப்போது லட்டுகள் பிடிக்க வரவில்லையென்றால், அதை மேலும் சூடுபடுத்திக்கொள்ளவேண்டும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து லட்டுக்களை பிடிக்கவேண்டும். கொஞ்சம் சர்க்கரையை தூவிக்கொண்டால் திருப்பதி லட்டின் டெக்ஸ்சர் கிடைத்துவிடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.