Thuthi Ilai Chutney : வெள்ளைப்படுதல், மூலநோய் பிரச்சனைகளை அடித்து விரட்டும் துத்தி இலை சட்னி.. இப்படி செஞ்சு பாருங்க!
Thuthi Ilai Chutney : உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கத்தைக் குறைக்கும், பற்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. அதேபோல் கருமேகம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். மேலும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும், காமம் பெருக்கும். இருமலைக்குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
Thuthi Ilai Chutney : தமிழகத்தில் நாம் மறந்த மூலிகையில் ஒன்று துத்தி இலை. இதில் ஏராளாமான நன்மைகள் உள்ளது. மனித உடலுக்கு துத்தி இலையின் ஒவ்வொரு பாகமும் நன்மை கொடுக்கிறது. இதன் இலைகள், மலர்கள், தண்டுகள், பழங்கள் மற்றும் வேர் என அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது. துத்தி இலைகள் மலச்சிக்கலைப்போக்கும். மேலும் அழற்சியை போக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு லேசான வெள்ளை படுத்தல் பிரச்சனையை போக்கும். மூல நோய்க்கு ஒரு அருமருந்தாக துத்தி இலை பார்க்கப்படுகிறது. இத்தனை நன்மை கொண்ட துத்தி இலையை வைத்து ஒரு சூப்பரான சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
துத்தி இலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்
துத்தி இலை
வெங்காயம்
தக்காளி
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய்
நல்லெண்ணெய்
சீரகம்,
உளுந்து
மிளகு
தேங்காய்
கடுகு
கறிவேப்பிலை
துத்தி இலை சட்னி செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு 2 ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் நன்றாக வறுத்து பின் அதில் ஒரு சின்ன துண்டு இஞ்சி, 20 பல் பூண்டு 150 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பழுத்த தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி சிறியதாக இருந்தால் 2 எடுத்து கொள்ளலாம். இப்போது நன்றாக சுத்தம் செய்த துத்தி இலையை 3 கைபிடி அளவு சேர்த்து வேக விட வேணடும். மேலும் அதில் 3 முதல் 4 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதற்கு தேவையான உப்பை சேர்த்து நன்றாக வதங்கிய பின் ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னி அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பொருட்களை சட்னி மீது கொட்டி எடுத்தால் துத்தி இலை சட்னி ரெடி.
இந்த சட்னி இட்லி, தோசை, போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. இப்படி அடிக்கடி துத்தி இலையை உணவில் சேர்த்து கொள்ளும் போது மூல நோய் குணமாகும்.
துத்தி இலையின் நன்மைகள்
ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு தாவரம் துத்தி. இது சிறுநீர் கோளாறுகள், மூட்டுவலி போன்றவற்றைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலை சுறுசுறுப்பாகச் செய்வதிலும் இது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கத்தைக் குறைக்கும், பற்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. அதேபோல் கருமேகம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். மேலும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும், காமம் பெருக்கும். இருமலைக்குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்