Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி-singer suchitra says verbal harassment was faced by tamil poet vairamuthu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aarthi Balaji HT Tamil
Sep 15, 2024 08:30 AM IST

Suchitra: ”உன் குரலில் காமம் இருக்குமா.. உன் குரல் மேல எனக்கு காதல் வருது” என வைரமுத்து தன்னிடம் பேசியதாக பாடகி சுசித்ரா பேட்டி அளித்து உள்ளார்.

Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

குறிப்பாக ராதிகா சரத்குமார், செளமியா, விசித்ரா, ஷகிலா உள்ளிட்டோர் குரல் கொடுத்து இருக்கிறார்கள். 

இதனிடையே இந்த விவாகரம் தொடர்பாக பேசி இருக்கும் சுசித்ரா, ”  ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு பலரும் குரல் கொடுக்கிறார்கள். ஏன் சின்மயி தனியாக போராடினார். அப்போது ஏன் யாரும் வாய் திறக்கவில்லை. தனி நபராக அவர் போராடியதற்கு கிடைத்த பரிசு, மறுக்கப்பட்ட வாய்ப்பு. ஆனாலும் அவர் தன் முடிவில் தீர்க்கமாக தான் இருந்தார்.

வைரமுத்து லீலைகள்

அவருக்கு நடந்த சம்பவம் போல் எனக்கும் நடந்து இருக்கிறது. நான், மே மாசம் தொண்ணுத்தெட்டில் பாடல் பாடிய சமயம் அது. அப்போது தான் எனக்கு தொலைப்பேசியில் அழைத்து வந்தது. யார் என்று பார்த்தேன். அந்த பக்கம் இருந்து வைரமுத்து பேசினார். உன் குரலில் காமம் இருக்குமா.. உன் குரல் மேல் எனக்கு காதல் வருது” என சொன்னார். எனக்கு சந்தேகம் வந்தது. காதல் வருது என்றால் அந்த பாடலில் நடனமாடிய ரீமா சென் மேல் வந்து இருக்கலாமே என்று எண்ணம் தோன்றியது.

உடனே அவர், வீட்டிற்க்கு வா மா, உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும்” என்று சொன்னார். நானும் என் பாட்டியும், வைரமுத்து வீட்டுக்குப் சென்று இருந்தோம். நீ தனியாக வருவாய் என்று நினைத்தேன் என சொன்னார். இல்லை நான் எங்கு சென்றாலும் என் பாட்டியுடன் தான் செல்வேன் என்று சொன்னேன். 

ஒன்றுமே புரியவில்லை

அவரிடம் என் பாட்டி தான் அதிகமாக பேசினார். நீங்க என் பேத்திக்கு பரிசு வைத்து இருப்பதாக சொன்னார். எடுத்து வாருங்கள் என கேட்டார். வைரமுத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் அவர் என்னை வர சொன்ன நோக்கமே வேறு. அதனால் பரிசு எப்படி வாங்கி வைத்து இருக்க முடியும். உள்ளே சென்று இரண்டு ஷாம்பு பாட்டில் கொண்டு வந்து கொடுத்தார். 

மீண்டும் மீண்டும் அழைப்பு

என் பாட்டி வைரமுத்துவிடம், நீங்க அவளுக்கு தந்தை மாதிரி. நீங்க தான் அவங்களைப் போல சின்ன பெண்களை வளர்த்து விட வேண்டும் என்று சொன்னாங்க. அவருக்கு முகம் எல்லாம் மாறிவிட்டது. பிறகு நாங்கள் அங்கு இருந்து கிளம்பிவிட்டோம். ஆனால் அதற்கு பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. எனக்கு போன் செய்து கொண்டே தான் இருந்தார். பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்தார். ஆனால் நான் ஃபோனை கட் செய்து விட்டுட்டேன். அதற்கு பிறகு பேசவே இல்லை ” என்றார்.

பொறுப்பு துறப்பு

இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.