Chickpeas: ஆண்மையைப் பெருக்கும் சுண்டல்.. கொட்டிக்கிடக்கும் சத்துக்கள்; 2K கிட்ஸ் பார்த்துக்கங்கப்பா!
சுண்டலில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
நாம் உண்ணும் உணவு இன்றைய காலத்தில் ஆரோக்கியமானதா என்றால், அது கேள்விக்குறியாகத் தான் இருக்கும். அப்படி, ஒரு ஆரோக்கிய உணவைப் பலரும் தேடிக்கொண்டு இருக்கும்போது, சூப்பரான உணவுதான், சுண்டல்.
சுண்டலில் வைட்டமின் பி, செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியச் சத்துகள் அதிகளவில் உள்ளன.
சுண்டலை உணவாக எடுத்துக்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள்:
- சுண்டலில் ஆந்தோசயனின், பைட்டோநியூட்ரியண்டுகள், ஆண்டி ஆக்சிடண்டுகள் இருப்பதால், ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் சேர்வது குறையும். எனவே, இது மாரடைப்பினைத் தடுக்கும்.
- சுண்டலில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய கனிமச்சத்துக்கள் இருப்பதால், உடல் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கிடைக்கிறது.
- கர்ப்பிணிகள், சுண்டலை சாப்பிடுவது நன்மை பயக்கும் செயலாகும். ஏனெனில், சுண்டலில் உள்ள போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கு உதவக்கூடியது.
- சுண்டலில் மெக்னீசியம், பொட்டாசியம் சத்துக்கள் இருக்கிறது. எனவே, இவை உயர் ரத்த அழுத்தத்தை நிறுத்தி, இதயத்தைப் பாதுகாக்கிறது.
சுண்டல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது.
சுண்டல், உண்பதால் மார்பக புற்றுநோய்க்கட்டிகள் உண்டாவது மட்டுப்படுகிறது.
- சுண்டலை இரவில் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் உண்ணும்போது ஆண்மை அதிகரிக்கும்
- சுண்டலில் இருக்கும் நுண்சத்துக்கள், மாதவிடாய் சுழற்சியினை சரிசெய்யப் பயன்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்