தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Threat To Chennai : சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்? – அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!

Threat to Chennai : சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்? – அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!

Priyadarshini R HT Tamil
Nov 07, 2023 12:30 PM IST

Threats to Chennai : எனவே வளர்ச்சி, விரிவாக்கம் என வரும்போது நிலத்தடி நீர் அதிகம் உள்வாங்கும் இடங்களில் கட்டுப்பாடுகள் மிக அவசியம். வேளாண் நிலங்களும், நீர் நிலைகளும் குறைந்து கட்டிடங்கள் ஆக்கிரமிக்கும் நிலபரப்பு அதிகமாகும்போது அது சென்னையின் சூழல் சமநிலையையும், நீர் பாதுகாப்பையும் பாதிக்கும்.

Threat to Chennai : சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்? – அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!
Threat to Chennai : சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்? – அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆய்வின் முக்கிய புள்ளி விவரங்கள் -

2021ல் 656 சதுர கி.மீ. இருந்த சென்ன பெருநகர கட்டிட நிலபரப்பு,

2031ல்-688 சதுர கி.மீ.

2041ல்-718 சதுர கி.மீ.

2051ல்-750 சதுர கி.மீ.

அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த உயர்வால் நிலத்தடி நீர் சேர்வதில் (Ground water Recharge) பெரும் சிக்கல்கள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

சென்னை பெருநகர நிலபரப்பில் 1,207 சதுரகி.மீ. அளவு நிலத்தடி நீர் சேர்வது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2101ம் ஆண்டில் கட்டட நிலபரப்பு (Built-up areas) 864 சதுர கி.மீ. ஆக உயரும் என்றும், அது சென்னை பெருநகர நிலபரப்பில் 72 சதவீதம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது வேளாண் நிலங்கள் சென்னை பெருநகர நிலபரப்பில் 346 சதுர கி.மீ.ஆக இருக்கும் நிலையில் 2051ல் அது 289 சதுர கி.மீ.ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி என்ற பெயரால் சென்னை பெருநகர வளர்ச்சியால் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு தேவைகள் அதிகமாவதால், நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள் இருக்கும் நிலபரப்பு கணிசமாகக் குறையும்.

தற்போது சென்னை பெருநகர பரப்பில் நீர்நிலைகள் இருக்கும் பரப்பு 153 சதுர கி.மீ.ஆக (13 சதவீதம்) இருக்கும் நிலையில்,

2031ல்-152 சதுர கி.மீ.

2051ல்-145 சதுர கி.மீ.

ஆகக் குறையும்.

2101ல் தற்போது 13 சதவீதம் பரப்பில் இருக்கும் நீர்நிலைகள், 10 சதவீதமாகக் குறையும். அடுத்த 50 ஆண்டுகளில் சென்னை பெருநகர வளர்ச்சி கணிசமாக உயரும்போது, முறையான திட்டமிடல் இல்லையெனில்,

வறட்சி அல்லது வெள்ளம்,

கடல்நீர் அதிகளவில் நிலபரப்பில் உட்புகுதல்,

நிலத்தடி நீர்மட்டம் குறைவு,

அதிக வெப்பத்தீவுகள் உருவாதல்,

போன்ற பிரச்னைகள் நிச்சயம் ஏற்படும்.

மேற்கண்ட ஆய்வு புள்ளிவிவரங்கள் Urban Water Journal எனும் பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர பரப்பில் நிலத்தடிநீர் அதிகம் சேரும் பகுதிகளில் 2100ல் நிலத்தடி நீர் சேகரிப்பு 30 சதவீதம் குறையும்.

இதனால், தெற்கு கடற்கரை நீர்பிடிப்பு பகுதிகளான, கிழக்கு கடற்கரை சாலை, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதி, மேல்மருவத்தூர், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் நிலத்தடிநீர் சேர்வது குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நகர்புற வளர்ச்சி, நீர்த் தேவை அதிகமாதல் காரணமாக, நிலத்தடி நீர் சேகரிக்கும் நிலபரப்பு குறைவதால், பெய்யும் நீர், நிலத்திற்குக் கீழ் தேக்கி வைக்கப்படாமல் அதிகளவில் கடலில் கலப்பதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே வளர்ச்சி, விரிவாக்கம் என வரும்போது நிலத்தடி நீர் அதிகம் உள்வாங்கும் இடங்களில் கட்டுப்பாடுகள் மிக அவசியம். வேளாண் நிலங்களும், நீர் நிலைகளும் குறைந்து கட்டிடங்கள் ஆக்கிரமிக்கும் நிலபரப்பு அதிகமாகும்போது அது சென்னையின் சூழல் சமநிலையையும், நீர் பாதுகாப்பையும் பாதிக்கும்.

எனவே, சென்னையின் உடனடித் தேவை, நீர்நிலைகள், வேளாண் நிலங்கள், நிலத்தடி நீர் சேர்வது பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல்,

ஏரிகள், நீர் நிலைகளின் எல்லைகளை பாதுகாத்தல்,

மழைநீர் சேகரிக்கும் திட்டங்களை ஊக்கப்படுத்துதல்,

தாழ்வான பகுதிகளில் வீடுகள் அல்லது பிற கட்டிடங்கள் அமைவதை தவிர்ப்பது,

நீர்நிலைகளை பிற வகை நிலங்களாக மாற்றி அமைப்பதை முற்றிலும் தடுத்தல் போன்றவை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சுருக்கமாக, வளர்ச்சி என்பது நீடித்த வளர்ச்சியை நோக்கியும், நீர்நிலைகளை காப்பதாகவும் இருக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வண்ணமும் அமைய வேண்டும். இல்லையேல் மாபெரும் அழிவை சென்னை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்