‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ மாதவிடாய், வயிற்றுப்போக்கு தீர்வுகள் என நன்மைகளை அள்ளி வழங்கும் தாமரை பூக்கள்!
‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ மாதவிடாய், வயிறுப்போக்கு என நன்மைகளை அள்ளி வழங்கும் தாமரை பூக்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தூய்மையின் அடையாளமாக தாமரைப் பூக்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவத்தில் இந்தப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. புத்த, இந்து மதங்களில் சடங்குகளுக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. சருமத்தை பளபளப்பாக்கும், புற்றுநோயை எதிர்த்து போராடும், வீக்கத்த்தை தடுக்கும் ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இந்த தாமரையின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். இது தெற்காசியாவில் பாரம்பரிய மருத்துவத்திலும், உலகம் முழுவதிலும் உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. தாமரை இந்தியாவின் தேச மலர் ஆகும். தாமரை பூக்கள் ஒரு கிண்ணம்போல் மலர்பவை, தண்ணீரில் இருப்பதால், தண்ணீர் அல்லிப்பூக்களையும் தாமரையையும் குழப்பிக்கொள்வார்கள். 100 வகை தாமரைப் பூக்கள் உள்ளன. இதில் எண்ணற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
தாமரை பூக்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
தாமரைப் பூக்கள் அழகால் மட்டும் உங்களை கவரவில்லை. இதில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உங்களை கவர்வதாக உள்ளது.
வயிற்றுப்போக்கை தடுக்கும்
தாமரை விதைகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தாமரை பூக்கள் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் தன்மைகொண்டவை. தாமரை பூக்களின் விதைகளை சில மணி நேரங்கள் ஊறவைத்து, இந்துப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். தாமரையின் தண்டுகளை மலச்சிக்கல் பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது.