சிங்க் சத்துக்கள் அதிகம் நிறைந்த நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்!
சிங்க் சத்துக்கள் அதிகம் நிறைந்த நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான். கட்டாயம் உணவில் சேர்த்து பலன்பெறுங்கள்.
சிங்க் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க சிங்க் சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிங்க் சத்துக்களை உடல் இழக்கும்போது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடல் சிங்க் சத்துக்களை இழக்கிறது. சிங்க் சத்துக்கள் உங்களுக்கு காயங்கள் விரைவில் ஆறவும், உங்களின் சீரான உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உங்கள் உடல் சிங்க் சத்துக்களை சேர்க்கவில்லையென்றால், சிங்க் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு போதிய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவை என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு, பயன்பெறுங்கள். உங்கள் உணவில் அன்றாடம் எடுத்து பலன்பெறுங்கள்.
பரங்கிக்காய் விதைகள்
பரங்கிக்காயின் விதைகளில், சிங்க் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதை நீங்கள் உணவில் சேர்ப்பதும் எளிது. ஒரு ஸ்னாக்ஸ் போல் கடித்து சாப்பிடலாம். ஒரு கைப்டிபயளவு பரங்கிக்காயின் விதைகளில் உங்கள் உடலுக்குத் தேவையான சிங்க் சத்துக்கள் போதிய அளவு உள்ளன. அது உங்களுக்கு நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆண்களுக்கு புராஸ்டேட் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் தாவர அடிப்படையிலான சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் எண்ணற்ற உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் சாலட், கறி வகைகள் என செய்து சாப்பிடலாம். நீங்கள் கொண்டைக்கடலை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொண்டால், அது உங்களுக்கு சிங்க் சத்துக்களுடன், நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
கீரை
கீரையில் அதிகளவில் சிங்க் சத்துக்கள் மற்றும் மற்ற எண்ணற்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. கீரையை நீங்கள் சமைத்து அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், அது உங்கள் உடலில் சிங்க் சத்துக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
பருப்பு வகைகளை
பருப்பு வகைகள் சிங்க் சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகள் ஆகும். இதில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் மற்ற வைட்டமின்கள் உள்ளது. சூப், வேகவைத்து அல்லது சாலட்களில் இதை பயன்படுத்தலாம். உங்கள் உணவில் பருப்பு சேர்த்துக்கொள்ள எண்ணற்ற வழிகள் உண்டு. இதில் சிங்க் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதில் உள்ள அதிகப்படியான சிங்க் சத்துக்கள், உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்ய உதவுகிறது. உங்கள் செல்களின் வளர்ச்சி மற்றும் அதை சரிசெய்ய உதவுகிறது.
முந்திரி
முந்திரி சுவையானது மற்றும் இதில் அதிகப்படியான அளவு சிங்க் சத்துக்கள் உள்ளது. சிறிய அளவு முந்திரியை உங்கள் உணவில் பயன்படுத்தும்போது, அது உங்களின் அன்றாட சிங்க் தேவையை பூர்த்தி செய்கிறது. அது உங்களுக்கு ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதத்தைக் கொடுக்கிறது. முந்திரியை அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்து, இனிப்புகள் செய்து என எப்படி சாப்பிட்டாலும், அதன் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.
குயினோவா
குயினோவா என்பது சிறு தானியம் ஆகும். இதில் சிங்க் மற்றும் மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள், புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் குளூட்டன் இல்லை. இதை நீங்கள் சாலட்களில் பயன்படுத்தலாம். உங்கள் உணவில் குயினோவாவை சேர்த்துக்கொள்வது, உங்களுக்கு போதிய அளவு சிங்க் சத்துக்கள் கிடைக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
யோகர்ட்
பால் பொருட்களில் சிங்க் சத்துக்கள் நிறைந்தது யோகர்ட், இதில் மேலும் ப்ரோபயோடிக்குகளும் உள்ளது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்ககிறது. இதை அப்படியே, இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதை நீங்கள் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சேர்த்து சாப்பிட சுவை மட்டுமல்ல ஊட்டச்சத்தும் அதிகம். யோகர்டை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் குறிப்பிடும்படியான அளவு சிங்க் சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்களும், முக்கிய வைட்டமின்களும் உள்ளன. உங்கள் நாளை ஒரு கப் ஓட்சுடன் துவங்குங்கள். இது நீங்கள் சிங்க் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் நீங்கள் பழங்கள், நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் சேர்த்தும் சாப்பிடலாம். உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க ஓட்ஸ் ஒரு சிறந்த தேர்வு.
தொடர்புடையை செய்திகள்