Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!

Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!

Priyadarshini R HT Tamil
Aug 30, 2024 12:54 PM IST

Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம் எனுமளவுக்கு சிறப்பாக இருக்கும்.

Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!
Amla Chammandhi : கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சம்மந்தி சேர்த்து சாப்பிட்டால் அதுதான் சொர்க்கம்!

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.

இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இத்தனை நற்குணங்கள் நிறைந்த நெல்லிக்காயில் சம்மந்தி செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

மாங்காய் – சிறிதளவு

இஞ்சி – சிறிது

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

செய்முறை

நெல்லிக்காயை விதைகளை நீக்கி எடுத்துக்கொள்வேண்டும். மாங்காயை தோலுடன் சிறிது நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். இஞ்சியை தோல் சீவி எடுத்துக்கொள்ளவேண்டும். கறிவேப்பிலையை அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். பச்சை மிளகாளை கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதை அம்மியில் செய்தால் சுவை நன்றாக இருக்கும். நெல்லிக்காயை வைத்து நசுக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து தட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உங்களிடம் அம்மி இல்லையென்றால் மிக்ஸியில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தாளிப்பு பொதுவாக தேவையில்லை. வேண்டுமானால் வழக்கமாக தாளிப்பு கொடுத்துக்கொள்ளலாம்.

இதை நன்றாக அரைந்தவுடன் வழித்து எடுத்தால் நெல்லிக்காய் சம்மந்தி தயார். இதை கொதிக்கும் சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். நெல்லிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு நல்ல லன்ச் பாக்ஸ் ரெசிபியும் ஆகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.