பாய் வீட்டு பிரியாணி மணம் இனி நம்ம வீட்டிலும்; இதுதான் ரகசியம்! இப்படி மசாலா செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பாய் வீட்டு பிரியாணி மணம் இனி நம்ம வீட்டிலும்; இதுதான் ரகசியம்! இப்படி மசாலா செய்யுங்கள்!

பாய் வீட்டு பிரியாணி மணம் இனி நம்ம வீட்டிலும்; இதுதான் ரகசியம்! இப்படி மசாலா செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 25, 2024 11:56 AM IST

பாய் வீட்டு பிரியாணி மசாலா செய்வது எப்படி?

பாய் வீட்டு பிரியாணி மணம் இனி நம்ம வீட்டிலும்; இதுதான் ரகசியம்! இப்படி மசாலா செய்யுங்கள்!
பாய் வீட்டு பிரியாணி மணம் இனி நம்ம வீட்டிலும்; இதுதான் ரகசியம்! இப்படி மசாலா செய்யுங்கள்!

தேவையான பொருட்கள்

வரமல்லி – 100 கிராம்

மிளகு – 25 கிராம்

சோம்பு – 25 கிராம்

சாஹீ ஜீரா – 25 கிராம்

(இது பிரியாணிக்கு சுவை கூட்டக்கூடிய ஒரு மசாலா பொருள். இது சீரகத்தில் ஒரு வகை. இதை நீங்கள் மளிகைக் கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்கிளில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்)

கிராம்பு – 15 கிராம்

சுருள் பட்டை – 25 கிராம்

ஸ்டார் சோம்பு – 25 கிராம்

ஏலக்காய் – 15 கிராம்

மராத்தி மொக்கு – மொக்கு

ஜாவித்திரி – 5 கிராம்

(இது சாப்பாட்டின் சுவையையே மாற்றிவிடும். எனவே இதை கொஞ்சமாக மட்டுமே உபயோகிக்கவேண்டும்)

பிரியாணி இலை – 25 கிராம்

கருப்பு ஏலக்காய் – 10 கிராம்

கல்பாசி – 10 கிராம்

காய்ந்த ரோஜா இதழ் – 25 கிராம்

ஜாதிக்காய் – 3

செய்முறை

இவற்றை நன்றாக சுத்தம் செய்து சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் கடாயை சூடாக்கி ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும். சில பொருட்கள் விரைவில் கரிந்துவிடும் என்பதால் கவனமாக வறுத்து எடுக்கவேண்டும்.

ஒவ்வொன்றையும் 2 நிமிடங்கள் மட்டுமே வறுத்துகொள்ளவேண்டும். அதிகநேரம் வறுக்கக்கூடாது. வறுக்கவேண்டும் என்பது முக்கியமல்ல, அனைத்தையும் சூடாக்கி எடுக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. இவையனைத்தையும், ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பொடித்துக்கொள்ளவேண்டும்.

ஜாதிக்காய்களை வறுப்பதற்கு முன்னரே இடித்து கடாயில் சேர்க்கவேண்டும். மராத்தி மொக்கு, சுருள் பட்டை, கருப்பு ஏலக்காய் போன்றவை மிக்ஸியில் அரைபடாது என்பதால், அவற்றையும் வறுத்த பின்னர் மிக்ஸியில் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த மசாலாவுக்கு வறுக்கும்போது முற்றிலுமே அடுப்பு குறைவான தீயில்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் பொருட்கள் ஒன்றும் கருகாமல் இருக்கும். அரைத்தவற்றை சூடி ஆறியபின்னர், ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்திவிடவேண்டும். இதை நீங்கள் எந்த ஒரு பிரியாணி செய்யும் போதும் உபயோகிக்கவேண்டும். பிரியாணி மட்டுமின்றி, கிரேவிகள், குருமாக்கள் என எதில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.