உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள்; அப்புறம் பாருங்கள்! நீங்கள் சொல்வவதை அப்படியே கேட்பார்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள்; அப்புறம் பாருங்கள்! நீங்கள் சொல்வவதை அப்படியே கேட்பார்கள்!

உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள்; அப்புறம் பாருங்கள்! நீங்கள் சொல்வவதை அப்படியே கேட்பார்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 25, 2024 05:00 AM IST

உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் கூறுங்களேன்.

உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள்; அப்புறம் பாருங்கள்! நீங்கள் சொல்வவதை அப்படியே கேட்பார்கள்!
உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள்; அப்புறம் பாருங்கள்! நீங்கள் சொல்வவதை அப்படியே கேட்பார்கள்!

நான் பெருமை கொள்கிறேன்

உன்னை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். குழந்தைகளுக்கு எப்போதும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று விரும்புவார்கள். குறிப்பாக அவர்களால் அவர்களின் பெற்றோர் பெருமையடைகிறார்கள் என்பதை அறிந்துகொண்டால் அவர்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறார்கள். இதை அவர்கள் பெறோர்களே கூறும்போது அவர்களுக்கு பெருமை மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். நீங்கள் இதை குறிப்பிடும்போது, நீ இன்று உன் நண்பனுக்கு உதவியதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் என்று அவரிகளிடம் கூறுங்கள். இதனால் அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.

என்ன ஆனாலும் உனக்காக நான் இருக்கிறேன்

சில நேரங்களில் வாழ்க்கை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான பிரச்னைகளைக் கொடுத்துவிடும். அப்போது அவர்களுக்கு எப்போதும் பெற்றோர் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்பதை உணர்த்தவேண்டும். இதனால் மாற்றம் கட்டாயம் ஏற்படும். எனவே அவர்களுக்கு நீங்கள் எத்தனை உறுதுணை என்பதை கூறிவிட்டால் போதும். அது அவர்களுக்கு சவாலான காலங்களில் உதவும். அவர்கள் எவ்வித விமர்சனம், நிராகரிப்பு என எதுவுமின்றி சவால்களை எதிர்கொள்வார்கள்.

தவறுகள் செய்வது நல்லது தான்

குழந்தைகள் எப்போது அவர்கள் பெற்றோரை ஏமாற்றம் அடையச் செய்வது குறித்து அச்சமடைவார்கள். இதனால் அவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவர்களின் தவறை அவர்கள் அறியச் செய்வது நல்லது. மேலும் அது வாழ்வின் ஒரு அங்கம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இதனால் அவர்கள் ஆபத்துக்களை தேர்ந்தெடுப்பதும் கற்றலின் அங்கம் என்று ஊக்கம் கொள்வார்கள். ஆனால் எந்த பிரச்னையில் இருந்தும் நீ என்ன கற்றுக்கொண்டால் என்பது முக்கியம். எனவே அங்கிருந்து முன்னேறிச் செல் என்று அறிவுறுத்துங்கள்.

நான் உன்னுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன்

அது விளையாட்டோ அல்லது சும்மா அரட்டையோ அல்லது ஒரு சினிமா பார்ப்பதோ, குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் செலவிடும் தரமான நேரத்தை அதிகம் விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களிடம் அவர்களுடன் நேரம் செலவிடுவதை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதை அடித்துக்கூறுங்கள். இது உங்களின் பிணைப்பை வலுப்படுத்தும். உங்களுக்கு மதிப்பைத் தரும்.

என்னை மன்னித்துவிடு

பெற்றோர்களும் மிகச்சிறப்பாக அனைத்தையும் செய்யக்கூடியவர்கள் அல்ல, அவர்களும் தவறு செய்வார்கள். எனவே நீங்கள் தவறு செய்யும்போது, மன்னிப்பு கேட்டால், அது உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கம். மன்னிப்பு கேட்பது, அவர்களுக்கு பொறுப்பை கற்றுத்தரும். தவறுகள் செய்வது இயற்கை என்பதை புரியவைக்கும். அதற்கான குற்றஉணர்வை சுமந்துகொண்டே இருக்கமாட்டார்கள். இது மரியாதையை விளக்கும் பாடமாகும்.

நீ என்ன நினைக்கிறாய்?

உங்கள் குழந்தையின் கருத்து என்னவென்று அவர்களிடம் கேட்டால், அது உங்கள் குடும்பம் குறித்து திட்டமிட உங்களுக்கு உதவும். குறிப்பான அன்றாட தேர்வுகளில் அவர்களிடம் நீங்கள் கருத்து கேட்கும்போது, அது அவர்களுக்கு மதிப்பைத் தரும். இதனால் அவர்களையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இது அவர்களுக்கு பிற்காலத்தில் முடிவுகள் எடுக்க உதவும். அவர்களை வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைத் தரும்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படி இருப்பது சிறப்பு

இன்று ஒப்பீடு, போட்டி என குழந்தைகள் அல்லாடும் வேளையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படி இருப்பதுதான் சிறப்பு என்று நீங்கள் அவர்களிடம் கூறினால், அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஒரு சேரத் தரும். அவர்களின் தனித்தன்மையை அவர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களுக்கு அவர்களின் இந்த தனித்தன்மையை நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதை கூறவேண்டும். அவர்கள் சாதிப்பதைவிட அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறினால் அவர்கள் இன்னும் மகிழ்வார்கள்.

நான் உன்னை நம்புகிறேன்

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அவர்களை நம்புவதாக கூறினால், அவர்களுக்கு அவர்களின் மீதுள்ள சந்தேகம் தீரும். அவர்கள் முன்னேற உதவும். அவர்கள் புதிதாக ஒன்றை துவங்கினாலோ அல்லது கடின காலத்தில் விடாமுயற்சியுடன் ஒன்றை செய்தாலோ, நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இது அவர்களுக்கு வலுகொடுக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.