10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!

10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 23, 2024 01:06 PM IST

10 நாட்கள் ஆனாலும் கெடாத வெந்தயக்குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.

10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!
10 நாட்கள் கெடாது வெந்தயக் குழம்பு; சூடான சாதத்துக்கு ஏற்றது! செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வெந்தயத்தில் குழம்பு செய்து சாப்பிட உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை செய்து வைத்துவிட்டால் 10 நாட்களுக்கு கெடாது. எனவே இந்த குழம்பை செய்து வைத்துக்கொள்ளுங்கள். சூடான சாதத்தில் தேவைப்படும்போது பிசைந்து சாப்பிடலாம். வெளியூர் செல்லும்போது எடுத்துச்செல்ல ஏற்றது.

தேவையான பொருட்கள்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

பூண்டு – 10 பல்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் – 10 முதல் 15 பல்

பழுத்த தக்காளி – 2

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் வெந்தயம் மற்றும் சீரகத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன், கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து தக்காளிப்பழத்தை நறுக்கி நன்றாக குழைய வேகவிடவேண்டும். தக்காளியை அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பச்சை வாசம் போகும் வரை வெந்தவுடன், உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஓரங்களில் எண்ணெயை பிரிந்து வரும் வரை வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் சீரகப்பொடியை தூவிக்கொள்ளவேண்டும்.

இந்தப்பொடியை குழம்பு கெட்டியாகும் நேரத்தில் தூவி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சூப்பர் சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும். இது பத்து நாட்கள் ஆனாலும் கெடாது. ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது சூடாக்கி சாப்பிடவேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.