Kadi Joke: ‘எனக்குனே வருவீங்களா.. இதுக்கு தான் பெத்துப் போட்டாங்களா..’ இன்றைய ‘கடி’கள்!-tamil kadi jokes august 07 2024 mokka comedy jokes - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke: ‘எனக்குனே வருவீங்களா.. இதுக்கு தான் பெத்துப் போட்டாங்களா..’ இன்றைய ‘கடி’கள்!

Kadi Joke: ‘எனக்குனே வருவீங்களா.. இதுக்கு தான் பெத்துப் போட்டாங்களா..’ இன்றைய ‘கடி’கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 07, 2024 09:51 AM IST

Kadi Joke: ஆகஸ்ட் 7 ம் தேதியான இன்று, உங்களை மகிழ்விக்க, உங்கள் பொருமையை சோதிக்க வருகை தரும் மொக்கை வடிவிலான கடி ஜோக்குகள் இதோ!

Kadi Joke: ‘எனக்குனே வருவீங்களா.. இதுக்கு தான் பெத்துப் போட்டாங்களா..’ இன்றைய ‘கடி’கள்!
Kadi Joke: ‘எனக்குனே வருவீங்களா.. இதுக்கு தான் பெத்துப் போட்டாங்களா..’ இன்றைய ‘கடி’கள்!

ராஜதந்திரங்கள் அனைத்து வீணாய் போச்சே!

ஆசிரியர்: அதிகம் சுமை தூங்கும் பூச்சி எது?

மாணவன்: மூட்டை பூச்சி சார்..

ஆசிரியர்: பொருள் வைக்க முடியாத பை எது?

மாணவன்: தொப்பை சார்..!

ஆசிரியர்: வேலைக்கு போற விலங்கு எது?

மாணவன்: பனி கரடி சார்!

ஆசிரியர்: கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?

மாணவன்: ‘மஸ்ரூம்’ தான் சார்!

ஆசிரியர்: தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?

மாணவன்: செலவாகும் சார்..!

ஆசிரியர்: வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன?

மாணவன்: முட்டையில் இருந்து தான்!

புதிய தத்துவம் 007

  • யானைக்கு 4 கால் இருக்கலாம், ஆனால், அதனால் STD, லோக்கல் எதுவுமே பண்ண முடியாது!
  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில் தான் படிக்க முடியும்
  • என்னதான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா?
  • என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவனை துப்பாக்கி உள்ளே போட முடியுமா?
  • ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. ப்ளட் டெஸ்ல பிட் அடிக்க முடியுமா?
  • கோல மாவில் கோலம் போடலாம்.. கடலை மாவில் கடலை போட முடியுமா?
  • லைப்ல ஒன்னும் இல்லைனா ஃபோர் அடிக்கும்.. தலையில ஒன்னும் இல்லைனா க்ளார் அடிக்கும்!
  • பரம்பறை பரம்பறையா உட்கார்ந்து சாப்பிடுற அளவு பணம் இருந்தாலும், ஃபார்ஸ்ட் புட் கடையில் நின்னுட்டு தான் சாப்பிடனும்!
  • ஆட்டோவுக்கு ஆட்டோனு பேர் இருந்தாலும், மேனுவலாக தான் ஓட்ட முடியும்.
  • தூக்க மருந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டால் இருமல் வராது!
  • வாழை மரம் தார் போடும்.. ஆனால் அதை வெச்சு ரோடு போட முடியுமா?
  • டீ கப்ல டீ இருக்கும். வேல்டு கப்புல வேல்டு இருக்குமா?
  • பாலில் பால்கோவா பண்ணலாம்… ரசத்தில் ரசகுல்லா பண்ண முடியுமா?
  • என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா?

கேள்வியை நீ கேட்கிறாயா.. அல்லது நான் கேட்கட்டுமா?

கேள்வி: சாப்பிடவே முடியாத கனி எது?

பதில்: பால்கனி

கேள்வி: சுவரில் இறங்காத ஆனி எது?

பதில்: பிரியாணி

கேள்வி: ஆபத்தான சிட்டி எது?

பதில்: எலெக்ட்ரிக்சிட்டி

கேள்வி: அதிர்ஷ்டம் இல்லாத நகரம் எது?

பதில்: லக்னோ

கேள்வி: வெட்டும் காய் எது?

பதில்: கத்திரிக்காய்

கேள்வி: எப்போதும் சிரிக்கும் பூச்சி எது?

பதில்: ஈ…

கேள்வி: பொருள் கிடைக்காத கடை எது?

பதில்: சாக்கடை

கேள்வி: கை கொண்ட காய் எது?

பதில்: முருங்‘கை’

கேள்வி: அனைவரையும் அழைக்கும் காய் எது?

பதில்: ‘வா’ழைக்காய்

கேள்வி: அசைவ காய்கறி எது?

பதில்: ‘முட்டை’கோஸ்

கேள்வி: குடிகாரனுக்கு பிடித்த காய் எது?

பதில்: ‘பீர்’க்கங்காய்

கேள்வி: வழிகாட்டும் காய் எது?

பதில்: பீட்‘ரூட்’

கேள்வி: வலியால் தினமும் தவிக்கும் காய் எது?

பதில்: வெங்‘காயம்’

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.