Anitha Kuppusamy: ‘ சாதி சாக்கடையை தூக்கி எறிந்த காதல்.. கல்யாணம் பண்ணப்ப ரொம்ப நாள் தாங்காதுன்னு’ - அனிதா குப்புசாமி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anitha Kuppusamy: ‘ சாதி சாக்கடையை தூக்கி எறிந்த காதல்.. கல்யாணம் பண்ணப்ப ரொம்ப நாள் தாங்காதுன்னு’ - அனிதா குப்புசாமி

Anitha Kuppusamy: ‘ சாதி சாக்கடையை தூக்கி எறிந்த காதல்.. கல்யாணம் பண்ணப்ப ரொம்ப நாள் தாங்காதுன்னு’ - அனிதா குப்புசாமி

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 10, 2023 06:30 AM IST

அனிதா குப்புசாமி தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து இருக்கிறார்

அனிதா குப்புசாமி!
அனிதா குப்புசாமி! (விகடன் )

அவர் என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னுடைய சம்மதத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தார். எனக்கு இசை மீது ஈடுபாடு அதிகமாக இருந்த காரணத்தினால், என்னுடைய முழு குறிக்கோளும் நான் எப்படியாவது பின்னணி பாடகி ஆட விட வேண்டும் என்பதிலேயே இருந்தது. 

இந்த நிலையில் அவரின் அப்பா அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டு, விடவே இல்லை. அப்போதுதான் நான் இவரை மிகவும் மிஸ் செய்தேன். குறிப்பாக அவரது குரலை மிகவும் மிஸ் செய்தேன். அப்போதுதான் இவர்தான் நமக்கானத்துணை என்று முடிவெடுத்தேன். இது குறித்து என்னுடைய குடும்பத்தில் சொன்ன போது எல்லோரும் என்னிடம், உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டார்கள். 

ஆனால், எல்லாவற்றையும் சமாளித்து இவரை நான் திருமணம் செய்த பின்னர், எங்களைப் பார்த்து எல்லோரும், இது எத்தனை நாளைக்கு ஓடும் என்றனர். காரணம், எங்களுக்கு தோல் முதற்கொண்டு அவ்வளவு வித்தியாசங்கள். ஆனால் அதன் பின்னர்தான் இசை எங்களை அப்படி வாழவைத்தது. கல்யாணம் ஆகி ஒரு வருடம் கழிந்த பின்னரும் அவர் என்ன சாதி என்று கேட்கவே இல்லை. எனக்கு அவரின் திறமை மட்டுமே தெரிந்தது. நான் கேட்கிறேன். இந்தக்கலரும், வெளித்தோற்றமும் குடும்பத்திற்கு ஆகுமா? இதுவா நமக்கு சோறு போடப்போகிறது.

அந்தக்காலத்தில் நாங்கள் வெறும் 7000 ரூபாய் வாங்கிக்கொண்டு முழுக்கச்சேரியையும் நடத்தி இருக்கிறோம். ஆனால், இப்போது 2 பேருக்கு 3 லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் என கேள்விப்படுகிறேன். நாங்கள் போட்ட பாதையில் சென்று இருக்கிறீர்கள். நன்றாக இருங்கள். அந்தப்பாதையில் நீங்கள் அப்படியே சென்று இருந்தால் நாங்கள் பெருமை பட்டு இருப்போம். ஆனால், அப்படி இல்லாமல் அதனை கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று பேசினார்.

 

நன்றி: அவள் கிளிட்ஸ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.