Afternoon Top 10 News: வங்கதேச கலவரம் முதல் அன்புமணியின் கேள்வி வரை! பிற்பகல் டாப் 10 செய்திகள்!
Afternoon Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Afternoon Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்
காப்பீட்டுக்கு 18% சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகாத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்.
வங்கதேச கலவரம் - ராகுல் காந்தி கேள்வி
வங்கதேச விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து உள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஹேக் ஹசீனா
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த அந்நாட்டு தலைவர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து இந்தியாவிலேயே இருப்பாரா அல்லது வெளிநாடு செல்வாரா என எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.
வங்கதேச விவகாரம்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
வங்கதேச நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.
நோபல் பரிசு பெற்றவருக்கு வங்கதேசத்தில் மவுசு
வங்கதேசத்தில் பதவியேற்கும் இடைக்கால அரசின் ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸை நியமிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழை எச்சரிக்கை
சென்னையில் இன்று இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை தொடரும். மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கோவைக்கு புதிய மேயர்
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ஆன கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை கடந்த ஜூலை 3ஆம் தேதி ராஜினாமா செய்த நிலையில் மறுதேர்தல் மூலம் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் ஆலோசனை
கவனம் பெறாமல் உள்ள துறைகளில் புதிய திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர், நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசுகையில், திட்டக்குழுவின் அறிக்கையே அரசுக்கான மார்க்ஷீட் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
'வெளிநாடுகளில் இருந்து முதலிட்டினை ஈர்க்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற விளம்பர விடியா திமுக அரசு, இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, முதலில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் 'கோயம்புத்தூர்' என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு குடிப்பக உரிமம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
டாபிக்ஸ்