Biriyani Man: ‘100 ரூபாய்க்கு 1 கிலோ பிரியாணி.. படைபலத்தோடு வெளுத்த காலேஜ் கும்பல்..’ - பிரியாணி மேன் உருவான கதை!
Biriyani Man: 200 ரூபாய்க்கு பிரியாணி வாங்கினால், கிட்டத்தட்ட எட்டு பேர் திருப்தியாக சாப்பிட்டு விடலாம். காலப்போக்கில் அது எங்களது குழுவில் வழக்கமாக ஆகிவிட்டது. - பிரியாணி மேன் உருவான கதை!

Biriyani Man: சமீப காலமாக யூ-டியூப்பில் ட்ரெண்டாக மாறி இருக்கும் சேனல்தான், பிரியாணி மேன். இதை நடத்தி வருபவர், அபிஷேக் ரஃபி. இவருக்கும் பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் இடையே, சமீப காலமாக பெரிய பிரச்சினை நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய தினம், அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
அதற்கு விளக்கம் கொடுத்த போலீசார், செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோவாக வெளியிட்டதாலேயே, பிரியாணி மேனை கைது செய்து உள்ளதாக கூறினர். இந்த நிலையில், அபிஷேக் எப்படி பிரியாணி மேனாக மாறினார் என்பதை, அவரே கடந்த வருடம், எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசினார்.
விஸ்காம் படித்த ஒரு மாணவன்.
இது குறித்து அவர் பேசும் போது, “அபி லயோலா காலேஜில், விஸ்காம் படித்த ஒரு மாணவன். அப்போது நானும், என்னுடைய நண்பர்களும் குறும்படங்கள் பலவற்றை எடுத்துக்கொண்டிருந்தோம். அந்தப்படங்களில் வேலை செய்வதற்கு எங்களது ஜூனியர்களை அழைப்போம். அவர்களும், அண்ணன்.. அண்ணன் என்று கூறிக்கொண்டு காசு வாங்காமல் வேலை செய்வார்கள்.
ஆனால், நாங்கள் நமக்காக இவ்வளவு இறங்கி வேலை செய்கிறார்களே.. அவர்களுக்கு பிரியாணியாவையாவது வாங்கிகொடுப்போம் என்று நினைத்தோம். அப்போது கடைகளில் ஒரு கிலோ பிரியாணி மிகவும் பிரபலம். அதன் விலை 100 ரூபாய்தான். 200 ரூபாய்க்கு பிரியாணி வாங்கினால், கிட்டத்தட்ட எட்டு பேர் திருப்தியாக சாப்பிட்டு விடலாம். காலப்போக்கில் அது எங்களது குழுவில் வழக்கமாக ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் எங்களுடன் வேலை செய்யப் போனாலே, பிரியாணி கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்
அது இன்னும் கொஞ்சம் மாறி, என் மீது கவனம் திரும்பி, என்னை பிரியாணி என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு கட்டத்தில், என்னை கல்லூரி முழுக்க பிரியாணி பையன் என்றுதான் அழைப்பார்கள். அதை கேட்கும் போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் நம்மை, சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவில்லை என்றாலும் கூட, பிரியாணி பையன் என்றாவது அழைக்கிறார்களே என்று குஷியாக இருக்கும்.
அப்போது, என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியானது பிரியாணி பையன் என்ற பெயரில் இருந்தது. நாங்கள் விஸ்காம் மாணவர்கள் என்பதால், நிறைய டிவி சேனல்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து கொண்டிருந்தோம். அதில் சிலவை ரிஜெக்ட் ஆகிவிடும். அதை எங்களது மன திருப்திக்காக நாங்கள் படமாக்குவோம். அதை யூடியூபில் அப்லோடு செய்யலாம் என்று முடிவு எடுத்தவுடன், அந்த யூடியூப் சேனலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் ஆலோசித்தோம்.
ஒரு கிலோ பிரியாணி
அப்போதுதான் நம்மை ஒரு கிலோ பிரியாணி என்று அழைப்பார்களே.. அதையே வைத்து விடலாம் என்று முடிவெடுத்தோம். ஒரு கட்டத்தில், எங்களது குழு உடைந்து விட்டது. ஆனால் காலப்போக்கில், அவரவர்கள் அவர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அடுத்த கட்டத்தை நோக்கி சென்று விட்டார்கள். ஆனால், நான் வீடியோ உருவாக்கத்திலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்து இங்கேயே இருந்து விட்டேன்.
அந்த நேரத்தில்தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை தி பிரியாணி பையன் என்று மாத்தினேன். இதைப் பார்த்த என்னுடைய அம்மா youtube சேனலுக்கும் அதே பெயரையே வைத்து விடலாமே என்று சொன்னார். நான் யோசித்தேன். பிரியாணி நமக்கு மிகவும் பிடிக்கும், அதையே வைத்துவிடலாமே என்று சொல்லி, பிரியாணி மேன் என்று youtube சேனலுக்கு பெயர் வைத்தேன். அப்படித்தான் நான் உருவானேன்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்