Sundaikai Thuvayal : நோய் தீர்க்கும் ஹெல்த் பாம்! வாரத்தில் 2 நாள் இந்தக்காய் சேர்த்தால் போதும்! ஆரோக்கியம் பெருகும்!
Sundaikai Thuvayal : நோய் தீர்க்கும் ஹெல்த் பாம்! வாரத்தில் 2 நாள் இந்தக்காய் சேர்த்தால் போதும்! ஆரோக்கியம் பெருகும்!
வாரத்தில் 2 நாள் அல்லது மாதத்தில் 4 நாள் இதை மோருடன் சேர்தது சுண்டை வற்றலாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் சுண்டைக்காய் துவையலாகவோ அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுண்டை வற்றல் சூரணத்தை பெற்று அதை மோரில் கலந்தும் பருகலாம். சுண்டைக்காயில் புளிக்குழம்பும் செய்யலாம் அல்லது கிரேவியாக செய்தால் மிகவும் நல்லது.
பொதுவாக சுண்டைக்காயில் சிறிது கசப்புத்தன்மை இருக்கும். இதனால் குழந்தைகள் அதை சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு இதுபோல் துவையலாக செய்து கொடுத்துவிட்டல் போதும். விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு டிஃபனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட கொடுத்துவிடுங்கள். அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். எனவே அடிக்கடி சுண்டைக்காய் உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பது அவசியம்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பர் காய்கறிகளை உங்கள் பொரியல் வகைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம், இரும்பு, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துக்கள் உள்ளது.
காய்ச்சல் காலங்களில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும். மூலம், மலச்சிக்கல், ரத்த மூலம் ஆகியவற்றுக்கும் தீர்வளிக்கக்கூடியது.
ஆஸ்துமா, டஸ்ட் அலர்ஜி, மூக்கடைப்பு, வறட்டு இருமல், நெஞ்சு சளி என அனைத்தையும் சரி செய்வதற்கும். நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கும், உடல் சோர்வைப்போக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் வல்லமை கொண்டது இந்த சுண்டைக்காய்.
சிறுநீரகத்துக்கு மருந்து, சிறுநீரக தொற்றுக்களுடன் அவதிப்படுபவர்களுக்கும் உதவக்கூடியது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஒரு காயாக சுண்டைக்காய் உள்ளது.
சுண்டைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – 5 பல்
வரமிளகாய் – 5
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – 2 கொத்து
சுண்டைக்காய் – ஒரு கைப்பிடி
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் புளி, பூண்டு, வரமிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் சுண்டைக்காயை சுத்தம் செய்து, அதை உரலில் சேர்த்து இடித்து, அலசிவிட்டு, கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
நன்றாக ஆறியவுடன், மிக்ஸிஜாரில் சேர்த்து துவையலாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த துவையலை இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபன் ஐட்டங்ளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த காய் நன்மை கொடுக்கிறது. எனவே கட்டாயம் இந்தக்காயை வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்ப்பது அவசியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்