தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stone Issue : பித்தப்பை, சிறுநீரக கற்களால் அவதியா? இதோ எளிய வீட்டு முறை தீர்வுகளும், சித்த மருந்துகளும்!

Stone Issue : பித்தப்பை, சிறுநீரக கற்களால் அவதியா? இதோ எளிய வீட்டு முறை தீர்வுகளும், சித்த மருந்துகளும்!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2023 12:27 PM IST

Stone Problems : இன்றைய வாழ்வியல் முறை மாற்றம், உணவுப்பழக்கம் ஆகியவை நமது உடலுக்கு நோய்களை கொண்டு வந்து சேர்க்கின்றன. சிறுநீரகம் மற்றும் பித்தப்பைகளில் கற்கள் இருந்துகொண்டு, அவற்றை நாம் அறுவைசிகிச்சை செய்ய நேரிடுகிறது. ஆனால் அந்த கற்றைகளை கரைக்க சித்த மருத்துவத்தில் சில மூலிகைகள் உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பித்தப்பை கற்களுக்கு -

• மஞ்சள் கரிசலாங்கண்ணி

• கீழாநெல்லி

• துளசி

• மஞ்சள்

• நெருஞ்சில்

• கொள்ளு

• கற்றாழை

• கருமிளகு

• மரமஞ்சள்

• கடுகு ரோகிணி

• கல்லுருக்கி செடி

• திரிபலா ( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)

மஞ்சள் கரிசலாங்கண்ணி -

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை 1 கைப்பிடி, துளசி 1 கைப்பிடி, கீழாநெல்லி 1 கைப்பிடி எடுத்து அரைத்து சாறு எடுத்து 30 மிலி சாறுடன் 10 மி.லி தேன் கலந்து காலை மாலை சாப்பாட்டிற்கு முன் தொடர்ந்து எடுத்து வர பித்தப்பை கற்கள் கரையும்.

கீழாநெல்லி -

கீழாநெல்லியை ஸ்டோன்ப்ரேக்கர் (STONE BREAKER) என்றும் சித்த மருத்துவத்தில் கூறுவர். சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைப்பதற்கு, வெளியேற்றுவதற்கு கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து 30 மி.லி சாறு எடுத்து 10 மி.லி தேன் கலந்து காலை மாலை 30 நிமிடங்களுக்கு முன் தொடர்ந்து எடுத்து வரலாம்.

மஞ்சள் -

மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. இது பித்தப்பை கல்லீரலை காக்கும் மிகச்சிறந்த உணவுப் பொருள். இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

நெருஞ்சில் -

நெருஞ்சில் சூரணம் 5 கிராம் எடுத்து 240 மி.லி நீரில் போட்டு அதை 60 மிலியாக‌ சுண்டக் காய்ச்சி வடிகட்டி 60 மி.லி தினசரி காலை, மாலை சாப்பாட்டிற்கு முன்பு தொடர்ந்து குடித்து வரலாம்.

கொள்ளு -

பித்தப்பை கற்களுக்கு கொள்ளு கசாயம் சிறந்தது. வெங்காயம், கருப்பு மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கொள்ளு சேர்த்து ரசம் வைத்து தினசரி உணவோடு சேர்த்துக்கொள்ளலாம்.

கற்றாழை -

கற்றாழை சாறு 60 மி.லி தினசரி காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள பித்தப்பை கற்கள் கரையும்.

கருப்பு மிளகு -

கருப்பு மிளகு பொடியை 5 கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தேவையான அளவு தேன் கலந்து வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம்.

மரமஞ்சள் சூரணம் -

மரமஞ்சள் சூரணம் 5 கிராம் எடுத்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

கடுகு ரோகிணி -

கடுகு ரோகிணி சூரணம் பித்தப்பை கற்களுக்கு சிறந்தது.

கல்லுருக்கிச் செடி -

கல்லுருக்கிச் செடி இலைச் சாறு அல்லது சூரணம் பித்தப்பை கற்களுக்குச் சிறந்தது.

திரிபலா -

திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலை மாலை தொடர்ந்து எடுத்து வர பித்தப்பை கற்கள் உருவாகாது‌.

பித்தப்பை கற்களுக்கு மருந்து -

• உருக்கு செந்தூரம்

• திரிபலா

• துளசி சூரணம்

• கரிசாலை சூரணம்

• கீழாநெல்லி சூரணம்

• கல்லுருக்கிச்செடி சூரணம்

• மஞ்சள் கரிசாலை சூரணம்

சிறுநீரக கற்களுக்கு -

• சிறுபீளை

• நெருஞ்சில்

• மூக்கிரட்டை

• பூனை மீசை

• வாழைத்தண்டு

• வாழைப்பூ

• கல்லுருக்கிச் செடி

• நீர்முள்ளி

• வெள்ளி

• ரணகல்லி

சிறுநீரக கற்கள் கரைய மருந்து -

• மூக்கிரட்டை சூரணம்

• நெருஞ்சில் சூரணம்

• சிறுபீளை சூரணம்

• நண்டுக்கல் பற்பம்

• குங்கிலய பற்பம்

• வெடியுப்பு சுண்ணம் பற்பம்

• சிலாசத்து பற்பம்

• உருக்கு செந்தூரம்

• ரணகல்லி சூரணம்

• வாழைப் பூ சாறு

மூக்கிரட்டை கீரை, நெருஞ்சில் முள், சிறுநீரை, பூனை மீசை, நீர் முள்ளி இவைகளை சம அளவு எடுத்து 240 மிலி நீரில் போட்டு 60 மிலியாக‌ சுண்டக் காய்ச்சி வடிகட்டி 60 மிலி தினசரி காலை, மாலை உணவிற்கு முன் தொடர்ந்து கற்கள் கரையும் வரை எடுத்துக்கொள்ளலாம்.

ரணகள்ளி இலை -

ரணகள்ளி இலை ஒன்று அல்லது இரண்டு எடுத்து 5 மிளகு சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீர் மோருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று நண்டுகல் பஸ்பம், குங்கிலிய பஸ்பம், வெடியுப்பு சுண்ணம், சிலாசத்து பஸ்பம் ஆகியவற்றை அளவுப்படி எடுத்து (1/2 கிராம் முதல் 1 கிராம் வரை) மேற்கண்ட மருந்துகளுடன் சேர்த்து தொடர்ந்து எடுத்துக்கொள்ள சிறுநீரக கற்கள் உடைந்து கரைந்து வெளியேறும்.

• உணவில் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• உப்பு, புளி காரம் குறைத்து உண்ண வேண்டும்.

• வெளியில் விற்கும் எந்த உணவுகளையும், திண்பண்டங்களையும் உண்ணக்கூடாது.

• துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

• சிறுநீரை அடக்கக்கூடாது.

• பசியை அடக்கக்கூடாது

• மலத்தை அடக்கக்கூடாது.

• தூக்கததை அடக்கக்கூடாது

• தினசரி குறைந்தது 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

• மது, புகை, பொடி பழக்கம் இருந்தால் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

• மேற்கண்டவைகளை முறையாக பின்பற்றி சித்த மருத்துவர் ஆலோசனையோடு சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் அறுவை மருத்துவம் இல்லாமல் பித்தப்பை கற்கள் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்.

தகவல் – காமராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு), திருச்சி.

WhatsApp channel

டாபிக்ஸ்