Spicy Chutney : வெயிலுக்கு கொஞ்சம் கவனமாதான் சாப்பிடனும் இந்த கார சட்னிய! சாதாரண நாளில் ட்ரை பண்ணுங்க!-spicy chutney this spicy chutney should be eaten with care in the sun try it on a normal day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Spicy Chutney : வெயிலுக்கு கொஞ்சம் கவனமாதான் சாப்பிடனும் இந்த கார சட்னிய! சாதாரண நாளில் ட்ரை பண்ணுங்க!

Spicy Chutney : வெயிலுக்கு கொஞ்சம் கவனமாதான் சாப்பிடனும் இந்த கார சட்னிய! சாதாரண நாளில் ட்ரை பண்ணுங்க!

Priyadarshini R HT Tamil
Apr 22, 2024 11:15 AM IST

Spicy Chutney : காரப்பிரியர்களுக்கு காரச்சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Spicy Chutney : வெயிலுக்கு கொஞ்சம் கவனமாதான் சாப்பிடனும் இந்த கார சட்னிய! சாதாரண நாளில் ட்ரை பண்ணுங்க!
Spicy Chutney : வெயிலுக்கு கொஞ்சம் கவனமாதான் சாப்பிடனும் இந்த கார சட்னிய! சாதாரண நாளில் ட்ரை பண்ணுங்க!

பூண்டு – 2 பற்கள்

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் – 12

கல் உப்பு – தேவையான அளவு

புளி – சிறிது

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

செய்முறை –

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

அடுத்து மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் நன்றாக ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.

சுவையான கார சட்னி தயார்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், உப்புமா, பொங்கல் என அனைத்து வகை டிபஃன் ரெசிபிக்கும் ஏற்றது.

இந்த சட்னி செய்வதற்கு அதிகபட்சமே 10 முதல் 20 நிமிடங்கள்தான் தேவைப்படும். எனவே இதை செய்வதும் எளிது. வீட்டில் உள்ள அனைவருக்கும் இது கட்டாயம் பிடிக்கும். கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்கள்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த தக்காளியை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.