தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cool Smoothies: கோடையில் தாக சாந்தி தரும் கூலான ஸ்மூத்திகள்

Cool Smoothies: கோடையில் தாக சாந்தி தரும் கூலான ஸ்மூத்திகள்

I Jayachandran HT Tamil
Apr 29, 2023 10:52 AM IST

கோடையில் தாக சாந்தி தரும் கூலான ஸ்மூத்திகள் செய்முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கூலான ஸ்மூத்திகள்
கூலான ஸ்மூத்திகள்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் உங்கள் கோடைக் காலத்தை ஆரோக்கியமானதாகவும் மாற்றலாம். ஃபிரெஷ் ஆன பழங்கள் அல்லது காய்கறிகளுடன் பால்/தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தி ரெசிபிக்களை சுலபமாக செய்திடலாம். இதனுடன் மிதமான காலை உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

மாம்பழ ஸ்மூத்தி

மாம்பழம் இல்லாத கோடை நாட்களா? பழங்களின் ராஜாவான மாம்பழத்தைக் கொண்டு ஒரு ஆரோக்கியமான ஸ்மூத்தி செய்யலாம். விதை நீக்கிய மாம்பழ துண்டுகளுடன் தயிர் அல்லது பால் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இது உங்களை நீண்ட நேரத்துக்கு நிறைவாக வைத்திருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

இந்தக் கோடை நாட்களை சமாளிக்க ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். ஸ்ட்ராபெரியுடன் ஒரு சில பெர்ரி வகைகளையும் சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இது உங்கள் உடல் சூட்டை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவையின் கலவையான ஸ்ட்ராபெரியின் சுவையை சமநிலைப்படுத்த பால் அல்லது தயிரை கொண்டு ஸ்மூத்தி செய்யலாம்.

முலாம்பழம் ஸ்மூத்தி

இந்த புது கலவை உங்களுக்கு நிச்சயம் விருப்பமானதாக மாறிவிடும். கோடையில் இன்றியமையாத பழமான முழாம் பழம் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், கோடை வெயிலை சமாளிக்கவும் உதவும். முலாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு, பால் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்தால் சுவையான ஸ்மூத்தி ரெடி.

இந்த ஸ்மூத்தி உங்கள் இதயத்தை வெல்வது உறுதி.

கிவி ஸ்மூத்தி

கிவி பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தி பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. நிறைந்த தாதுச்சத்துகளையும் கொண்டுள்ளது. கிவிப் பழத்துண்டுகளுடன் நீர்த்த பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடியுங்கள். சுவை வேறு லெவலில் இருக்கும். உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தீர்க்கும். வயிறு நிரம்பி சத்தோடு இருப்பீர்கள்.

பீட்ரூட் ஸ்மூத்தி

இனிப்புச்சுவையுடன் இருக்கும் பீட்ரூட்டை வைத்து ஸ்மூத்தி செய்தால் சர்க்கரை தேவையில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகளும் இந்த பீட்ரூட்டை சாப்பிடலாம். பீட்ரூட்டில் நிறைந்த ஆக்ஸிடெண்ட்கள் உள்ளது. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். பீட்ரூட்டுடன் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தியாக அருந்தலாம்.

கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இது போன்ற ஸ்மூத்திகளை செய்து குடிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்