உறக்கத்தை மேம்படுத்தும், டிஎன்ஏவை சரிசெய்யும் மெக்னீசியம்! உங்கள் தேவையை பூர்த்தி செய்வது எப்படி?
உறக்கத்தை மேம்படுத்தும், டிஎன்ஏவை சரிசெய்யும் வீக்கத்தைக் குறைக்கும் மெக்னீசிய சத்துக்கள். உங்கள் தேவையை பூர்த்தி செய்வது எப்படி? என்ன அதிகம் சாப்பிடவேண்டும்? எப்படி உட்கொள்ளவேண்டும்.
இன்று நாம் மெக்னீசியத்தின் முக்கியத்துவத்தை அதிகளவில் கேள்விப்படுகிறோம். மற்றவற்றைவிட, வீக்கத்தைக் குறைக்க, உறக்கத்தின் தரத்தை அதிகரிக்க மற்றும் டிஎன்ஏவை சரிசெய்ய மெக்னீசியச் சத்துக்கள் தேவை. உடலின் பல வேலைகளில் மெக்னீசியம் பங்கெடுக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் மெக்னீசியத்தை மாத்திரைகளாக எடுத்துக்கொள்வதைவிட, அதை மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களாக மற்றும் காய்கறிகளாக எடுத்துக்கொள்வது நல்லது. மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு உணவு பாலக்கீரை. பாலக்கீரையில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் இல்லை. ஆனால் அதை நீங்கள் பல வழிகளில் சமைத்து, ஊட்டச்சத்து அளவுகள் குறையாமல் சாப்பிட முடியும். பொதுவாகவே கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடி, சருமம் மற்றும் எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. அதில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகியவை உள்ளன.
ஏன் மெக்னீசியம்?
வைட்டமின் டியைப்போல், பின்னாளில் மெக்னீசியமும் நிறைய கவனத்தைப் பெறுகிறது. ஏனெனில் நம்மில் பலருக்கு குறைவாகக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களுள் மெக்னீசியமும் ஒன்று. எனினும் நமக்கு அதன் தேவையும் உள்ளது. மெக்னீசியம், உடலில், பல நூற்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் தொடர்புகொண்டுள்ளது. இது உங்கள் தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறது.
நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் அதிகளவில் உள்ள மினரல் மெக்னீசியம். உடலில் இதன் பங்கு நிறைய உள்ளது. இது 300க்கும் மேற்பட்ட வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையானதாக உள்ளது. தசைகளை சரிசெய்ய மற்றும் ரத்த நாளங்கள் மற்றுத் இதயத்தை அமைதியாக்குவது இதன் முக்கிய வேலையாகும். இது நரம்பு பரிமாற்றங்களையும் சரிசெய்கிறது. மெக்னீசிய குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, தசை இறுக்கம், உறக்கமின்மை மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
பாலக்கீரையில் மெக்னீசியம்
பாலக்கீரையை நீங்கள் சூப்பர் ஃபுட் உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், கல்லீரல், குடல் மற்றும் கண்களைக் காக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. குடலைத் தூண்டும் உட்பொருட்கள் நிறைந்தது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஒரு கப் பச்சை பாலக்கீரையில் 24 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. எனவே பாலக்கீரை மட்டுமல்ல அனைத்து வகை கீரைகளையும் அன்றாடம் உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லது.
சமைத்து அல்லது பச்சையாக சாப்பிடவேண்டுமா?
பாலக்கீரை போன்ற கீரை வகைகளை சமைத்தும் சாப்பிடலாம் அல்லது சமைக்காமலும் சாப்பிடலாம். இது அதில் உள்ள மெக்னீசியச் சத்துக்களை குலைக்கும். உண்மையில் சமைத்தபின் பாலக்கீரையில் உள்ள மெக்னீசியத்தின் அளவுகள் அதிகரிக்கிறது. சமைத்த பாலக்கீரையில் 157 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. நீரில் கரையக் கூடிய வைட்டமின்களை சில காய்கறிகள் சமைக்கும்போது இழக்கும். ஆனால் மெக்னீசியம், இரும்பு, கால்சியம் போன்ற மினரல்களை உடல் உறிஞ்சும் அளவு சமைத்தவுடன் அதிகரித்துவிடும். எனவே இரவு உறங்கச் செல்லும்முன் பாலக்கீரை எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆழ்ந்த இரவு உறக்கத்தைக் கொடுக்கும்.
உங்கள் உணவில் பாலக்கீரையை சேர்த்துக்கொள்ளும் எளிய வழிகள்
உங்கள் உணவில் பாலக்கீரையை பல்வேறு வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம். சாலட்களுடன் சேர்க்கலாம். சிக்கன், சூரை மீன் வான்கோழியுடன் சேர்த்து சாப்பிட கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். வால்நட்கள் மற்றும் அவோகேடோவுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
கீரை, வாழைப்பழம், ப்ளூபெரி, ராஷ்பெரி, ஹெம்ப் விதைகள் மற்றும் நட்ஸ் பால் சேர்த்து ஸ்மூத்தி செய்து பருகலாம். பாஸ்தாவில் ஒரு கைப்பிடியளவு கீரையை சேர்த்து சமைக்கலாம். சூப், ஆம்லேட்கள், வறுவல் ஆகியவற்றில் சேர்த்து சமைக்கலாம். இதில் கூடுதல் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்