தினமும் சூரியகாந்தி விதை உங்கள் டயட்டில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 12, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கிய கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துகள் மிகுந்த ஸ்நாக்ஸ் ஆக சூரியகாந்தி விதை இருக்கிறது

இந்த சூரியகாந்தி விதைகளை உங்களது டயட்டில் பல்வேறு வகைகளில் சேர்த்துக்கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

சூரியகாந்தி விதையில் அதிகமாக நிறைவுறா கொழுப்புகள் இருக்கின்றன. குறிப்பாக இதில் இருக்கும் லினோலிக் அமிலம் கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக இதய நோய், பக்கவாதம் பாதிப்பின் ஆபத்து குறைகிறது

இதில் அதிகப்படியான வைட்டமின் ஈ இருக்கிறது. இது செல்கள் பாதுகாக்கும் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக இருக்கிறது. அதேபோல் சரும ஆரோக்கியத்தையும், நோய் தடுப்பு செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து, புரதம் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

இதில் இருக்கும் செலனியம் தைராய்டு செயல்பாட்டுக்கும், மூளை ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது. அத்துடன் அறிவுசார் செய்பாட்டை மேம்படுத்தி, நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் வைட்டமின் ஈ ஃப்ரி ரேடிக்கல் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சுருக்கங்கள், கோடுகள் தோன்றுவதை குறைக்கிறது. தோல் ஆரோக்கியத்தையும், நிறத்தையும் பாதுகாக்கிறது

’வீடு, வாகனம், திருமணம் உறுதி!’ கன்னி ராசிக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!