முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை! குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை! குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள்!

முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை! குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 12, 2024 12:36 PM IST

முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை, குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள். பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருவது.

முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை! குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள்!
முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை எனும் மூலிகை! குப்பையில் வளரும் கீரையின் நற்குணங்களைப் பாருங்கள்!

வீக்கத்தைக் குறைக்கிறது

முள்ளு முருங்கை இலைகளைப் பறித்து விளக்கெண்ணெயில் வறுத்து, அதை ஆறவைத்து, வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும். வறுத்த இலைகளை எடுத்து வீக்கமுள்ள இடத்தில் வைத்து ஒரு துணியை வைத்து கட்டிவிட்டால், வீக்கம் உள்ள இடத்தில் வீக்கமே கண்களுக்கு தெரியாது. வலியையும் குறைக்கும்.

மாதவிடாய் வலியைக் குறைக்கும்

அரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 4 கல்யாண முருங்கை இலைகளை சேர்க்கவேண்டும். கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவேண்டும். தண்ணீரின் நிறம் மாறியவுடன், அடுப்பை அணைத்து வடிகட்டி, கால் டம்ளர் அளவு எடுத்து மாதவிடாய் காலங்களில் பருகினால் மாதவிடாய் வலிகள் குறையும்.

வயிற்றுவலி மற்றும் சளி

கைப்பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து, கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி ஒன்று அல்லது 2 டேபிள் ஸ்பூன் பருகினால் அது செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் வலிகள் மற்றும் சளியை மற்றும் குடற்புழுக்களை நீக்கும்.

சருமப்பிரச்னைகளை தீர்க்கும்

ஒரு கைப்பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து, மஞ்சள் தூள் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும். இதை சருமத்தில் அரிப்பு, எரிச்சல் உள்ள இடத்தில் தடவினால் அனைத்து வகை சரும வியாதிகளும் குணமாகும். காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் திறந்த காயங்களுக்கு வைக்கக்கூடாது.

அனீமியா

கல்யாண முருங்கை இலை அனீமியாவுக்கு சிறந்த வீட்டு முறை சிகிச்சையாகும். கல்யாண முருங்கை இலையில் தோசை செய்து சாப்பிடலாம். கல்யாண முருங்கை இலைகளை ஆய்ந்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்யலாம். இதை சட்னியுடன் சாப்பிட்டு வர அனிமீயா அடித்து விரட்டப்படும்.

இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை உங்கள் உடலுக்கு கொடுக்கும் கல்யாண முருங்கை இலையில் மற்ற நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

செரிமானம்

கல்யாண முருங்கை இலையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உங்களுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் குடலில் ஆரோக்கிய நுண்ணுயிர்கள் வளர உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது

கல்யாண முருங்கை இலையை உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது

கல்யாண முருங்கை இலைகளில் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் உட்பொருட்கள் உள்ளது. இதை நீரிழிவு நோயாளிகள் உங்கள் உணவில் கட்டாயம் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

கல்யாண முருங்கை இலையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது

கல்யாண முருங்கை இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ சத்துக்கள் உள்ளது. மேலும் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியச் சத்துக்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனைக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.