Sleep Deficiency : இரவில் சரியாக உறங்க முடியவில்லையா? இந்த ஒரு பொருளில் பால் தயாரித்து பருகுங்கள் போதும்!
Sleep Deficiency : இரவில் சரியாக உறங்க முடியவில்லையா? கசகசாவில் பால் தயாரித்து பருகினால் போதும். ஆழ்ந்து உறங்கலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
இன்றைய காலகட்டத்தில் உறக்கமின்மை பலரையும் அச்சுறுத்தும் ஒரு வியாதியாக உருவெடுத்துள்ளது. சரியாக உறங்காமல் இருப்பது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை கொண்டுவருகிறது. இதனால் உங்களின் உடல் மட்டுமின்றி மனநலனும் பாதிக்கப்படுகிறது. எனவே உறக்கமின்மையை விரட்டியடிக்க நமது வீட்டின் ஐந்தரைப் பெட்டியில் உள்ள கசகசாவே இதற்கு தீர்வு தரும்.
இந்த கசகசாவை நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும், அதில் உள்ள எண்ணற்ற நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கசகசா – 2 ஸ்பூன்
தண்ணீர் – 50 மில்லி லிட்டர்
தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை
50 மில்லி லிட்டர் தண்ணீரில் கசாகசாவை ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்னர் அந்த தண்ணீருடன் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதை துணியில் சேர்த்து பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பிழிந்து எடுத்தால் நல்ல பால் கிடைக்கும். அதில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை ஒரு ஸ்பூன் கலந்து இரவு உறங்கச் செல்லும் முன் தினமும் இதை பயன்படுத்த வேண்டும். இந்தப்பால் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
இந்தப்பாலில் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவும் சேர்த்துக்கொள்ளலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம் சார்ந்தது.
கசகசாவில் உள்ள சத்துக்கள்
கசகசாவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் கசகசாவில், 9.7 மில்லிகிராம் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், ரத்தம் உறைவதற்கும் உதவுகிறது. உடலின் நரம்பு மண்டல ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் இதன் இரும்பு மற்றும் கால்சிய சத்துக்கள் உதவுகிறது.
100 கிராம் கசகசாவில், 525 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 28.13 கிராம், நார்ச்சத்துக்கள் 19.5 கிராம், கொழுப்பு 41.56 கிராம், புரதம் 21.22 கிராம், தினசரி தேவையில் தியாமின் 74 சதவீதம், ஃபோலேட் 21 சதவீதம், வைட்டமின் பி6 19 சதவீதம், வைட்டமின் ஈ 12 சதவீதம், சோலைன் 11 சதவீதம், ரிபோஃப்ளாவின் 8 சதவீதம், கால்சியம் 144 சதவீதம், பாஸ்பரஸ் 124 சதவீதம், மாங்கனீஸ் 109 சதவீதம், மெக்னீசியம் 98 சதவீதம், இரும்புச்சத்துக்கள் 75 சதவீதமும் உள்ளது.
கசகசாவில் உள்ள நன்மைகள்
கசகசா கருவுறும் திறனை அதிகரிக்கிறது.
உறக்கமின்மை நோயை எதிர்த்து போராடுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது.
இதய நோயை மேம்படுத்துகிறது.
வாய் அல்சரை குணப்படுத்துவதும் வல்லமை பெற்றது.
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.
கண்களுக்கு நல்லது.
நினைவாற்றலை அதிகரிக்கிறது.
சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
தைராய்டு பிரச்னைகளுக்கு நல்லது.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.
வலியைக் குறைக்கிறது.
பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது.
மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்