விவாகரத்து இல்லாத வாழ்க்கைக்கு உதவும் டிப்ஸ்!

By Marimuthu M
Jun 14, 2024

Hindustan Times
Tamil

கணவன் - மனைவி இருவரும் ஒருவர் பெற்றோரை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். கணவன் தனது குடும்பத்தினருடன் தனியாகப் போய் பேசும்போதும், மனைவி தனது குடும்பத்தினருடன் தனியாகப் போய் பேசும்போதும் தலையிடக் கூடாது. 

மனிதர்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியவர்கள். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ முன்பு தவறாகப் பேசியிருப்பார். இப்போது மனம் திருந்தியிருப்பார். அப்படி இருக்கும்போது பழையதை குத்திக்காட்டி பேசக் கூடாது.

 எப்போதுதான் என்னை புரிந்துகொள்ளப் போகிறீர்களோ என எப்போதும் இல்லறத் துணையிடம் சீண்டாதீர்கள். அவனோ/ அவளோ அப்படித்தான் என்று யாரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்.

கணவன் - மனைவி இடையே நடக்கும் அனைத்து விஷயங்களையும், தம்பதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லவே கூடாது. அது ப்ரேக் அப்புக்கு வழிவகுக்கும். 

எப்போதும் ஒருவரைப் பற்றி ஒருவர் பூதக்கண்ணாடி போட்டு, குறை சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக, ஒருவரை ஒருவர் பாராட்டக் கற்றுக் கொடுங்கள்.

ஒருவருக்கு இடையே ஒருவர் சண்டையிட்டுப் பேசாமல் இருந்தால் அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்குள் பேசி சமாதானம் ஆகிவிட வேண்டும். இல்லையென்றால், பிரச்னை விபரீதமாகிவிடும். 

கணவரைப் பற்றி, தன் குடும்பத்தாரே தவறாகப் பேசும்போது மனைவியும்,  மனைவியைப் பற்றி தன் குடும்பத்தாரே தவறாகப் பேசும்போது கணவரும் நாசூக்காகவாவது கூப்பிட்டு  குடும்பத்தாரை எச்சரித்துவிட வேண்டும்.  இல்லையேல் பிரச்னை பெரிதாகும்.

ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!