Skin Care : வறவற சருமம் பளபளப்பாக வேண்டுமா? அதற்கு பிரபலங்கள் சாப்பிடும் எளிய காலை உணவு இதுதான்!
Skin Care : வறவற சருமம் பளபளப்பாக வேண்டுமா? அதற்கு பிரபலங்கள் சாப்பிடும் எளிய காலை உணவு எது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள். உடலுக்கு தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் பட்டியலில் பீட்ரூட் உள்ளது. எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள். எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. கட்டாயம் பீட்ரூட்டில் இந்த கோலா உருண்டையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
பீட்ரூட்டின் நன்மைகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது.
ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது.
இத்தனை நன்மைகளைத்தரும் பீட்ரூட்டை நீங்கள் அப்படியே காலையில் சாப்பிடும் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அதை எப்படி செய்யவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1 (தோல்நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும். வேகவைத்த பீட்ரூட்டை எடுத்து நன்றாக துருவிக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். பின்னர் அதை துருவிய பீட்ரூட்டில் சேர்க்கவேண்டும்.
தயிரை எடுத்து கொஞ்சம் அடித்து, அந்த தாளித்த பீட்ரூட் கலவையில் சேர்த்து போதிய உப்பு போட்டு அப்படியே அதை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
காலையில் வேறு எந்த காலை உணவுமின்றி இதை மட்டும் வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் செய்யும்போது உங்கள் சருமம் பளபளக்கும். உடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி, துருவி எடுத்துக்கொண்டு, கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து துருவிய பீட்ரூட்டை அதில் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி எடுத்து ஆறவிட்டு தயிர் சேர்த்தும் சாப்பிடலாம். ஆனால் வேகவைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
இதை மட்டும் வெறும் வயிற்றில் காலை உணவாக எடுக்க விரும்பாதவர்கள் சப்பாத்தியுடன் இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதை தனியாக எடுக்கும்போது கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்