Side Effects of Mouth Wash : மவுத்வாஷ் பயன்படுத்துபவரா நீங்கள்? அதில் ஆல்கஹால் கலந்துள்ளதா? அச்சச்சோ ஆபத்த பாருங்க!
Side Effects of Mouth Wash : மவுத்வாஷ் பயன்படுத்துபவரா நீங்கள் அதில் ஆல்கஹால் கலந்துள்ளது என்றால், அது ஏற்படுத்தும் ஆபத்துகளாக ஆய்வு கூறுவது என்ன?
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதில் உங்கள் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாய்தான் உங்களை தெளிவாக பேசவைக்கிறது. உணவை சுவைத்து, மென்று விழுங்க உதவுகிறது. இதனால்தான் நாம் உணவுகளையும் மகிழ்ச்சியுடன் உட்கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் நல்ல வாய் ஆரோக்கியத்தை கடைபிடிதீர்கள் என்றால் அது உங்கள் பற்களை வாழ்நாள் முழுவதும் நல்ல முறையில் காக்கிறது.
பல் துலக்குதல்
உங்கள் வாய் ஆரோக்கியம் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு பற்களிவ் உள்ள கிருமிகள், பாக்டீரியாக்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். நாளொன்று இருமுறை பல் துலக்குவதை குழந்தைகளுக்கு உறுதியாக்குங்கள். ஏனெனில் முறையாக சுத்தம் செய்யப்படாத பற்களில் ப்ளேக் கிருமிகள் உருவாகி, ஈறுகளில் சேதத்தை ஏற்படுத்தும்.
பல் துலக்க டிப்ஸ்கள்
பல் துலக்க ஃப்ளுரைட்கள் கொண்ட டூத்பேஸ்ட்களை பயன்படுத்துங்கள். இது உங்க்ள பற்களின் எனாமலை பாதுகாத்து வலுப்படுத்துகிறது.
ஈறுகளை சுத்தம் செய்வதுபோல் ஃபிரஷ்களைப் பிடித்து பற்களை துலக்கவேண்டும்.
வட்டவடிவிலும் கொஞ்சம் கொஞ்சம் இடமாக வாய் முழுவதும் சுத்தம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு பல்லின் அனைத்து பக்கங்களிலும் ஃபிரஷ் படும்படி சுத்தம் செய்யவேண்டும்.
பற்களை துலக்கியபின் கைகளால் ஈறுகளை மெல்ல தடவிக்கொடுங்கள். அப்போதுதான் ஈறுகளில் ரத்த ஓட்டம் பரவி பல் பாதுகாப்பு மேம்படும்.
பல் துலக்கிய பின் அல்லது அவ்வப்போது வாய்துர்நாற்றத்தைப் போக்க சிலர் மவுத் வாஷ்களை பயன்படுத்துகிறார்கள். அவை ஏற்படுத்தும் ஆபத்துகளைப் பாருங்கள்.
ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்
ஆல்கஹால் கலந்த வாய்கொப்பளிப்பான்களால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அண்மை ஆய்வுகள் அச்சுறுத்தும் தகவல்களை வெளியிட்டுள்ளன.
சமீபத்திய ஆய்வுகளில் வழக்கமாக பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்களை தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தினால், வாய் பகுதியில் வாழும் நன்மை மற்றும் தீமை பயக்கும் பாக்டீரியாக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு (Oral Microbiome) அது, வாய் சுகாதாரத்தை பெருமளவு பாதிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஈறுகளில் பாதிப்பு (Periodontal Diseases) ஏற்படுவதோடு, சில வகை புற்றுநோய்களும், (உணவுக்குழல் (Esophageal), பெருங்குடல் (Colorectal Cancers) ஏற்படுவதாக ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆல்கஹால் கலந்த வாய்கொப்பளிப்பான்களை (Alcohol-based Mouthwashes) தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தினால், Fusobacterium nucleatum, Streptococcus angiosus வகை பாக்டீரியாக்கள் அதிகமாகி, அவை பின்னர் ஈறு பாதிப்புகளையும், உணவுக்குழல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களையும் ஏற்படுத்துகிறது.
மேலும், சாராயம் கலந்த வாய்கொப்பளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தினால், ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் Actinobacteria வகை நுண்ணுயிரிகள் குறைந்து போவதாகவும், அதனால், ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டிலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்கள் (Intestinal Biome) உடலில் நோய் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பதை சமீபத்திய ஆய்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபடுத்தியுள்ளது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம், பெப்டைட் YY (PYY) எனும் புரதம் சிறுகுடலில் அதிகம் சுரந்து, அது பசியைக் குறைப்பதாகவும், அதனால், உடல் பருமன் சிகிச்சைக்கு தீர்வு கிடைப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
சில வகை உணவுகள் (ஆப்பிள், வாழைப்பழம்) Glucogon Like Peptide-1 (GLP-1) புரதத்தை சிறுகுடலில் அங்குள்ள L செல்கள் மூலம் சுரக்கச்செய்து, அவை, இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை உறுதிசெய்து உடம்பிற்கு நன்மை பயப்பதாகவும் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.
குடல் பாக்டீரியாக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை நாம் உணர வேண்டும்.
பழைய சாதம் உட்கொள்வதால், நொதித்தல் தன்மையால் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாவதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே அதை பயன்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்